கர்ணனைப் போல வலது கை கொடுப்பதை இடது கை தெரியாமல் கொடுப்பது சூப்பர் ஸ்டாரின் பாணி. இது தான் அவரது ப்ளஸ் பாய்ண்ட். அதுவே தான் அவரது மைனஸ் பாய்ண்ட்டும் கூட.
ஒரு இஸ்திரிப் பெட்டி கொடுத்துவிட்டு, அதை இரண்டு வாரம் விளம்பரம் செய்யும் இந்த விளம்பர யுகத்தில் விளம்பரங்களை துளியும் விரும்பாமல் அவர் செய்யும் உதவிகள் யாருக்கும் தெரிவதில்லை. இந்த ஒரே காரணத்தினாலேயே, என்ன செய்துவிட்டார் ரஜினி என்று அநேகம் பேர் கேள்வி எழுப்புகின்றனர் - இன்றும் கூட.
“சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கொடை வள்ளல்” - சத்யராஜ்
கார்கில் நிதியாகட்டும், சுனாமி நிதியாகட்டும், திரைப் படைத்துறையை சேர்ந்த பல்வேறு தொழிலாளர் அமைப்புகளுக்கு அளித்த நிதியாகட்டும், ரஜினியின் பங்கும் அங்கு உண்டு. இதை தவிர்த்து ஆரவாரமின்றி ரஜினி செய்திருக்கும் உதவிகள் நிறைய. இதை நான் கூறவில்லை. புரட்சி தமிழன் சத்யராஜ் தான் கூறினார். வீரா படத்தின் நூற்றைம்பதாவது நாள் விழாவில்.
அந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ், அப்போது தான் நடித்துகொண்டிருந்த “வீரப் பதக்கம்” படத்தின் போலீஸ் அதிகாரி கெட்டப்பிலேயே இந்த விழாவிலும் கலந்துகொண்டார்.
விழாவில் அவர் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து பேசிய பேச்சு இருக்கிறதே…அப்பப்பா…. காமராஜர், அண்ணா, எம்.ஜி.யார் ஆகியோர்தான் அவரை ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார். அந்த விழாவில் தான் ரஜினி திரைப் படைத்துறைக்கு செய்த அநேக உதவிகளை பட்டியலிட்டார்.
என்ன செய்வது….அதே சத்யராஜ் தான் கே..கூ…பூ… என்றும் பேசியது. மாடு கெட்டால் தேடலாம்; மனுஷன் கெட்டால்?
ஒ.கே. நாம் நமது மேட்டருக்கு வருவோம்….
இணைக்கப்பட்ட பேப்பர் கட்டிங்கில் நீங்கள் காண்பது சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா உட்பட எண்ணற்ற திரைப்படங்களுக்கு புகைப்பட கலைஞராக பணிபுரிந்த நேஷனல் செல்லையா, ரஜினி பற்றி கூறியது. திரைப் படைத்துறை சார்ந்த ஒருவர் அப்போதே கூறியது இது. சும்மா உங்கள் கவனத்திற்காக. [இது போன்ற பழைய விழாக்கள், மற்றும் சூப்பர் ஸ்டாரின் மேடைப் பேச்சுக்கள், அவரது அறிக்கைகள் ஆகியவை வெளிவந்த செய்தித்தாள்கள் யாரிடமாவது இருக்குமானால், தயவு செய்து என்னை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.sankar713@yahoo.com
No comments:
Post a Comment