மகுடங்களையே மறுத்தவருக்கு டாக்டர் பட்டம் ஒரு பொருட்டா?

அவரது சம்பந்தம் துளிகூட இல்லாமலேயே ரஜினியின் தலை உருட்டபடுவது இப்போது வழக்கமாகிவிட்டது.
இந்த விஷயம் எனக்கு முதலிலேயே தெரிந்திருந்த போதிலும், நாமாக இதை என் கூறவேண்டும் என்று நினைத்து தவிர்த்தேன். ஆனால், விஷயம் குறித்து ஒரு சில இடங்களில் கசிந்துவிட்டதால், சில உண்மைகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே இந்த பதிவு.

கொடுக்காத ஒரு பட்டம் நிராகரிக்கப்பட்ட பின்னணி
கொடுக்கபடாத ஒரு டாக்டர் பட்டம், ரஜினிக்கு நிராகரிக்கப்பட்டதாம். இது எப்படி இருக்கு?
விஷயம் இதுதான்: மஹாராஷ்ட்ர ரஜினி மன்ற தலைவர் திரு. ஆதிமூலம், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று, கோரிக்கை விடுத்து அவரது அருமை, பெருமைகள், மற்றும் அவர் திரையுலகில் நிகழ்த்திய பல சாதனைகளை பட்டியலிட்டு இந்தியாவில் உள்ள பல பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதினர்.
காரைக்குடி அழகப்பா பலகலைக் கழகம் மட்டும் இதற்க்கு பதில் அனுப்பியது. ரஜினியின் பயோ-டேட்டா மற்றும் இன்ன பிற விபரங்களை கேட்டிருந்தது அதில்.
ஆதிமூலமும், அதை அனுப்பிவைக்க, விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்த விகடன் குழுமம், விஜயகாந்திற்கு முன்னால், ரஜினி டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்டால் என்னாவது என்ற பதைபதைப்புடன், சிண்டு முடியும் வேலைகள் பலவற்றை செய்ய, கடைசியில் அழகப்பா பல்கலைக்கழகம் அந்த பரிசீலனையையே டிராப் செய்யுமளவிற்கு போய்விட்டது.
எதிர்ப்பு தெரிவித்த ஜே.கே. ரித்தீஷ் நற்பணி (??!!!) மன்ற தலைவர்
மதுரை மாவட்ட ஜே.கே.ரித்தீஷ் நற்பணி மன்ற தலைவர் சீனிவாசன் என்பவர், ரித்தீஷுக்கு முன்பாக ரஜினிக்கு டாக்டர் பட்டத்தை தர எதிர்ப்பு தெரிவித்து சூப்பர் ஸ்டாரைப் பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் ஆட்சேபகரமான பல கருத்துக்களை ஒரு வாரமிருமுறை இதழில் கூறியிருக்கிறார். (எல்லார் முறையும் போய், இப்போது ரித்தீஷ் முறையா? அடக் கடவுளே…!!)
கொந்தளித்த ரஜினி மன்றத் தலைவர்
இது குறித்து கருத்து தெரிவித்த மஹாராஷ்ட்ர ரஜினி மன்றத் தலைவரும், ரஜினிக்கு டாக்டர் பட்டம் தர முயற்சி எடுத்தவருமான ஆதிமூலம் கூறுகையில், “ரசிகர்களை எந்த விதத்திலும் சுய லாபத்திற்காக பயன்படுத்தாதவர் ரஜினி. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து தனது கடும் உழைப்பால் மேலே வந்தவர் ரஜினி. அப்படிப்பட்டவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதால் அந்த பட்டத்திற்கு தான் பெருமையே தவிர ரஜினிக்கு அல்ல. மேலும் ரஜினியிஜ்ன் வாழ்கை வாழ்வில் முன்னுக்கு வர துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாகும். அவரது வரலாற்றை படிக்கும் இளைஞர்களுக்கு வாழ்வில் நாமும் எதையாவது சாதிக்கவேண்டும் என்று உந்துதல் பிறக்கும். இப்படி பட்ட ஒருவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்ப்பவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. யாருக்கு வேண்டுமானால் டாக்டர் பட்டம் தரட்டும். நாங்க எதிர்க்கவில்லை. ரித்தீஷுக்கு கொடுத்துவிட்டுதான் ரஜினிக்கு கொடுக்கவேண்டும் என்று கூறுவதுதான் தவறு. செந்திலுக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டுதான் தமிழக முதல்வருக்கு தரவேண்டும் என்று சொல்வதைப் போல் இருக்கிறது இது,” என்று குமுறித் தள்ளிவிட்டார்.
எதிர்பாராத இந்த சர்ச்சைகளினால், பரிசீலனையில் இருந்த இந்த விஷயத்தையே அழகப்பா பல்கலைக்கழகம் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. (அரசியல் நெருக்கடி கூட இருக்க வாய்ப்புண்டு)
இதை முதலில் கேள்விப்பட்ட எனக்கு சிரிப்பு தான் வந்தது.
டாக்டர் பட்டத்தை மறுத்த ரஜினி - வரலாறு கூறும் உண்மை
இது போன்ற பட்டங்களின் மீதெலாம் விருப்பமற்றவர் ரஜினி என்பது உலகம் அறிந்தது.
புதுவை பலகலை கழகம் பத்தாண்டுகளுக்கு முன்பே ரஜினிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது ரஜினி அதை ஏற்க மறுத்தவிட்டார். “தாங்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கும், நன் மதிப்பிற்கும் நன்றி. இருப்பினும் இந்த பட்டத்தை என்னால் ஏற்க இயலாது.” என்று பட்டத்தை மறுத்து ரஜினி புதுவை பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் பற்றிய விபரம் பல்கலைக்கழக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதை பார்த்த மாணவர்களுக்கு ரஜினி மீது நன்மதிப்பு இன்னும் பல மடங்கு கூடியது.
இந்த செய்தி வெளியிட்ட ஜூ.வி, ரஜினிக்கு புதுவை பல்கலைக்கழகம் அளித்த பட்டத்தை அவர் ஏற்க மறுத்த விபரத்தை குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டது.
விஷயம் இப்படியிருக்க ரஜினி ஏதோ டாக்டர் பட்டத்திற்கு அலைந்து அது கிடைக்காமல் போய்விட்டது போல செய்திகள் பரப்பப்படுகிறது.
நன்றி சொல்லுவோம்
கௌரவ டாக்டர் பட்டம் என்பது தகுதியற்றவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டு அதன் தகுதியை அது இழந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை கைவிட்ட அழகப்பா பலகலைகழகத்திற்கு நாம் நன்றி சொல்வோம்.
குறிப்பு: டாக்டர் பெற வேண்டி சுய முயற்சி எடுப்பவர்கள் தான் அநேகம். அனால் இங்கு, அதற்க்கு முயற்சி செய்தவர் ரஜினியோ அவருக்கு நெருக்கமானவர்களோ அல்ல. எங்கோ உள்ள ஒரு ரசிகர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...