ஒபாமா வெற்றி நமக்கு கூறும் சேதி என்ன?


அமெரிக்காவின் முதல் கறுப்பர் இனத்தை சேர்ந்த அதிபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஒபாமா. இந்த வெற்றி அவருக்கு எளிதில் கிட்டவில்லை. தனக்கு எதிரான துவேஷப் பிரச்சாரங்கள் அனைத்தையும் தனது பொறுமையாலும், சகிப்புத்தன்மையாலும், வென்று, தடைக் கற்களையே படிக்கற்களாக்கி காட்டியுள்ள ஒபாமா, ரஜினி நாளை தமிழகத்தில் பெறப்போகும் சரித்திர வெற்றிக்கு ஒரு முன்னோடி என்றால் மிகையாகாது.
அணுகுமுறையால் வென்ற ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கட்டத்தில் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது சொந்தக் கட்சியினர் உட்பட அனைவரும் அவரது இனத்தை சுட்டிக்காட்டி, நிறவெறியை தூண்டும் வண்ணம் பேசினர். அப்படியிருந்தும் தனது அணுகுமுறையால் அதை தகர்த்து வெற்றிக் கனியை பறித்துள்ளார் ஒபாமா.
எனக்கு தெரிந்து தேர்தல் பிரசாரத்தின் போது, தான் செய்யப் போகும் பணிகள் பற்றி தான் அவர் அதிகம் பேசினாரே தவிர யாரையும் அவர் தாக்கி பேசவில்லை, குற்றம் கூறவில்லை.
இந்த மாபெரும் வெற்றியை தன் தலைக்கு ஏற்றிக்கொண்டதாக தெரியவில்லை.
யாராவது நினைத்துப் பார்த்ததுண்டா?
ஒரு மூன்று வருடங்களுக்கு முன் இதை யூகித்தவர் யாராவது உண்டா? ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்பு? ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்க அதிபராவார் என்று யாராவது சொல்லியிருந்தால் நாம் எள்ளி நகையாடியிருப்போம். ஏனெனில், அமெரிக்காவில் நிறவெறி அந்தளவு தலைவிரித்தாடியது. ஆனால் அவரோ குறை கூறும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு வெள்ளையர்களும் பெருவாரியாக தனுக்கு வாக்களிக்கும்படி தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார்.
இறைவன் என்ற ஒருவன்….
இவரது போட்டியாளராக ஹில்லாரி அறிவிக்கபட்டபோது, அவர் தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் கருதினர். அதற்கேற்றாற்போல், அவர் ஒபாமாவுக்கு கடும்போட்டியை ஏற்படுத்தினார். இருப்பினும், இறைவன் விருப்பப்படி தானே அனைத்தும் நடக்கும்? அவனல்லவா, யாரை எங்கு எப்போது வைக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான்…இதோ ஒபாமா வெற்றிபெற்றுவிட்டார். அவர் வெற்றி பெற்றிருப்பது அமெரிக்காவிலேயே இன்னும் பலருக்கு நம்பமுடியவில்லை. (இந்திய தொழில் துறையை பாதிக்காத அளவு, இவர் தனது தொழில் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்).
அமெரிக்காவிலேயே அந்த அதிசயம் நடக்கும்போது தமிழகத்தில் ஏன் நடக்காது? (இனி ஒபாமாவை தங்களுடன் ஒப்பிட்டு லெட்டர் பேட் கட்சி நடிகர்கள் உட்பட உப்புமா நடிகர்கள் கூட பேட்டியளிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்).
தமிழ் நாட்டு ஒபாமா
ஒபாமாவுக்கு எதிராக இனவெறி கட்டவிழ்த்து விடப்பட்டதைபோல, சூப்பர்ஸ்டாருக்கு எதிராகவும் இனவெறி கட்டவிழ்த்துவிடப்படுகிறது. ஒபாமாவின் அறிவுப்பூர்வமான, அணுகுமுறையில் குறை காணமுடியாதவர்கள் அவரது இனத்தை தான் கடைசியில் சுட்டிக்காட்டினர். அதையும் அவர் இன்முகத்தோடு வென்றார்.
சூப்பர் ஸ்டாருக்கு அப்படியேதான். அவரை, அவரது செயல்களில் குற்றம் காணமுடியாதவர்கள் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம் - கன்னடன். ஆனால் அவரோ, அது குறித்து பொருட்படுத்துவதுகூட இல்லை. சுத்த தமிழனாக ரசிகர் கலந்துரையாடலைக் கூட தமிழ் தாய் வாழ்த்து பாடி தான் ஆரம்பிக்கிறார். (எத்தனை பேருக்கு இது தெரியும்?)
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்…
சூப்பர் ஸ்டார் ஜஸ்ட் ஒரு உண்ணாவிரத உரையின் மூலமும், ரசிகர் சந்திப்பின் மூலமும், முன்பிருந்ததைவிட பன்மடங்கு புகழ் பெற்றுவிட்டா. மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு இடம் பிடித்துவிட்டார். யாரையும் குறைகூறாமல், கோபப்படாமல், சிக்கலான, தர்மசங்கடத்தை தரக்கூடிய கேள்விகளுக்கு கூட சிரித்துகொண்டே, அறிவுப் பூர்வமான பதில்களை அவர் கூறியவிதத்தை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். இப்படிப்பட்ட மாணிக்கத்தை கையில் வைத்துக்கொண்டு, கரித்துண்டை அல்லவா வைரம் என்று நாடிக்கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு புரிந்துவிட்டது. இனி அந்த நடிகர் குட்டிக்கரணம் அடித்தாலும் பப்பு வேகாது.
“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; ஆனா கைவிடமாட்டான்” - பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய எழுத்துக்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...