“தீவிரவாதிகளை விசாரணையின்றி தூக்கிலிடுங்கள்!!” - பாட்ஷா விழாவில் ரஜினி ஆற்றிய ஆவேச உரை!!




எங்கள் கண்ணீர் அஞ்சலி!!
மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நெஞ்சை பதற வைக்கும் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் கண்டு நாடே உறைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் துறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், நம் விருந்தினர்களாக வந்து இந்த பூமியில் மடிந்த வெளிநாட்டினருக்கும் எங்கள் இதயங்கனிந்த அஞ்சலி. அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
பிணையாளிகளை காக்கும் பொருட்டு களத்தில் இறங்கி தம் இன்னுயிர் நீத்த போலீசாருக்கும், தேசிய பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி. நாடு என்றென்றைக்கும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சவால் விடப்பட்டுள்ள இந்த தருணத்தில் நாமனைவரும் ஒன்று பட்டு நின்று தீவிரவாதத்திற்கெதிராக ஒருமித்த குரல் கொடுப்போம்.
இது குறித்து நான் முன்பே பதிவை வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தீவிரவாதம் பற்றி ரஜினியின் கருத்து என்ன?
சூப்பர் ஸ்டார் அறவே வெறுக்கும் ஒரு விஷயம் தீவிரவாதம். பாட்ஷா பட வெள்ளிவிழாவில் அப்போது தமிழ் நாட்டில் பரவி வந்த வெடிகுண்டு கலாச்சாரத்தை கண்டித்து பேசியாதும், பிறகு அது மிகப் பெரிய அரசியல் சூறாவளியாக மாறி அப்போதைய ஜெயா அரசை தூக்கி எரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.
கண்டித்து பேசியதோடல்லாமல் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளையும் அந்த உரையில் அவர் கூறியிருந்தார். தீவிரவாதம் எல்லை மீறி போய்விட்ட இந்த தருணத்தில் அதை நான் நினைவுகூர்கிறேன்.
தீவிரவாதிகளை ஒடுக்க தேவையானது ஒரு இரும்புக்கரம். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அவர்கள் மீது துளியும் இரக்கம் கட்டக்கூடாது. விசாரணை, சாட்சி போன்ற சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களை தப்பவிட்டுவிடக் கூடாது. இதைத்தான் சூப்பர் ஸ்டார் பாட்ஷா வெள்ளி விழாவில் வலியுறுத்தியிருந்தார்.
ரஜினி கூறிய வழிமுறையை பின்பற்றி சிலரை தண்டித்தலே போதும், நிச்சயம் மற்றவர்களுக்கு பயம் வந்துவிடும். தீவிரவாதம் கட்டுப்படும்.
1995 இல் ரஜினியை ஆவேசப்படுத்திய நாட்டின் அப்போதைய சூழல் இன்றைக்கு அதை விட பலமடங்கு பெருகியிருப்பது வருத்ததிற்குரிய விஷயம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...