காற்று போன பலூன் ஒரு மாநில முதல்வரை விஞ்சிய அதிசயம


ரஜினியின் துணிவு கருணாநிதிக்கு இல்லை - டாக்டர் ராமதாஸ்
“ரஜினி இப்போது ஒரு காற்று இறக்கப்பட்ட பலூன். நான் அதில் ஊசியை குத்திவிட்டேன். தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறேன் என்று சொன்ன ஒரு நடிகரை மக்கள் முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள்.” - சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரைப் பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னது இது.

“நட்சத்திர உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினி ஆற்றிய உரை பாராட்டத்தக்கது. அவரது துணிச்சலை கண்டு வியந்தேன். அவரது பேச்சு, ஈழத்தமிழர்கள் பட்ட வழிகளுக்கு ஒத்தடம் இடுவதாக அமைந்தது. மொத்தத்தில் ஈழத்தமிழர் பிரச்னையில் ரஜினி காட்டிய துணிச்சல் கருணாநிதியிடம் இல்லை.” -இந்த இதழ் தூ.வி.யில் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது.
காற்று போன பலூன், ஒரு மாநில முதல்வரை விட சிறந்த ஒன்றாக மாறிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது காலம். இன்னும் என்னென்ன அதியசயங்கள் நடக்குமோ?
தூ.விகடனின் கீழ்த்தரமான செயல்
ராமதாசின் மேற்படி பேட்டியை கவர் ஸ்டோரியாக “ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை” என்னும் தலைப்பில் தூ.வி. வெளியிட்டுள்ளது. அதை கண்டு எங்கே இந்த வக்கிர கும்பல் மாறிவிட்டதோ என்று என்ன வேண்டாம்.
அங்கே தான் இருக்கு விஷயமே. அதே இதழில் அட்டையை திரும்பியவுடன் முதல் பக்கத்தில் “அரசியலில் ரஜினி - தீராத முப்பது வருபட்ட குழப்பம்” என்னும் ஒரு விஷமத்தனமான தலைப்போடு, சூப்பர் ஸ்டாரின் உணர்ச்சிகரமான, உணர்வுபூர்வமான இலங்கைத் தமிழ் ஆதரவு உண்ணாவிரதத்தை, அவரது ஆவேச உரையை - உள் அர்த்தம் கற்பித்து - நான் ஏற்கனவே கணித்தபடி - கொச்சைபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது தூ.வி.
விற்பனை தந்திரம்
இதற்க்கு காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ? ரஜினிக்கு கிடைத்துள்ள எதிர்பாராத இந்த அமோக மக்கள் ஆதரவு விஷகாந்தின் வாய்ப்புகளை தடுக்கும் என்பதால் தான். விஷகாந்தை சில பல சொந்த காரணங்களுக்காக இந்த தூ.வி. கும்பல் தூக்கி பிடிப்பது தான் உங்களுக்கு தெரியுமே. இப்படி ஒரு ரஜினி எதிர்ப்பு கட்டுரை மக்களை சென்று சேரவேண்டாமா? இந்த தூ.வி கருமத்தைதான் வாங்குபவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்களே. எனவே, அவரசர அவசரமாக டாக்டர் ராமதாசை அணுகி, ஒரு பேட்டி எடுத்து, அதில் கடைசி கேள்வியாக கலையுலகின் இலங்கைத்தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்தை பற்றி கேட்டு, அதற்க்கு ரஜினியின் துணிச்சலை தொடர்புபடுத்தி பதிலும் பெற்றுவிட்டனர். அதை கவர் ஸ்டோரியாக வைத்து வாங்குபவர்களை இழுத்து இளிச்ச வாயர்களாக்குவதுதான் இந்த தூ.வி. கும்பலின் நோக்கம்.
வரவிருக்கும் தூ.வி. குழும வார இதழிலும் சூப்பர் ஸ்டாரை மிகவும் விமர்சித்து அவரது நல்ல செயல்களுக்கு உள் அர்த்தம் கண்டுபிடித்து ஒரு கட்டுரை வெளியாகவிருப்பதாக அறிகிறேன்.
தூ.வி. கும்பலை காலம் புரட்டிப் போடும் நாள் விரைவில் வரும். அன்று எனக்கு நினைவூட்டுங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...