நண்பர்களே, தூர் தர்ஷன் பேட்டி தொடர்பான பதிவை தயார் செய்ய நிறைய நேரம் இழுக்கிறது. அதனால் அது குறித்து ஆவலுடன் உள்ள நண்பர்கள் இன்னும் சற்று பொறுத்திருக்கவும். நாளை அது கண்டிப்பாக போஸ்ட் செய்யப்படும்.
அதுவரை உங்கள் ஏமாற்றத்தை தவிர்க்கவே இந்த சிறு பதிவு. (ஹி…ஹி..II)
…………………………………………………………………………………………………………………
அந்தக் கட்சி மாநாடு முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மழைவிட்டும் தூவனாம் விடாத குறையாக, அந்த மாநாட்டின் சாதனை பற்றி நாளிதழ்களில் ‘காக்கா’ விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதன் பின் புலத்தை விசாரித்தால் கிடைக்கும் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். அது நமக்கு தேவையில்லை.
ரஜினி இந்த இடத்தில்….
இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் எனக்கு நினைவுக்கு வருகிறார்.
1996 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-தா.மா.க. வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் எந்த அளவு காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த வெற்றியை கொண்டாடியபோது அதை “CLAIM” செய்ய அவர் அங்கு இல்லை. அமெரிக்காவில் உள்ள தனது குருநாதர் சச்சிதானந்த ஸ்வாமிகள் ஆசிரமித்தில் இருந்தார்.
அனைத்தும் முடிந்த பிறகு எந்த அறிவிப்பும் இன்றி சென்னை திரும்பினார். “மறுபடியும் உங்களை கோட்டையில் சந்திக்கிறேன்” என்று கலைஞரிடம் சொன்னபடி அவரை கோட்டையில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று தான் நீங்கள் அருகே காண்பது.
அதற்க்கு அவர் கூறிய பதிலை பாருங்கள். தொண்டர்களை விளம்பரங்களுக்காக வற்புறுத்தும் தலைவரோடு இதை ஒப்பிட்டு கொள்ளுங்கள்.
செய்தியாளர்கள்: “முன்னறிவிப்பு இன்றி இப்படி திடீரென்று சென்னை திரும்பியிருக்கிறீர்களே?”
ரஜினி: “வீண் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காகத் தான் இப்படி எந்த வித விளம்பரங்களும் வரவேற்புகளும் இல்லாமல் சுதந்திரமாக வர ஆசைப்பட்டேன்”
(அவர் தொந்தரவு என்று குறிப்பிட்டது தனக்கில்லை, மற்றவர்களுக்கு…!! இதை வேறு ஒரு பேட்டியிலும் ரஜினி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்)
No comments:
Post a Comment