சூப்பர் ஸ்டாரின் வரலாற்று புகழ் 1995 தூர்தர்ஷன் பேட்டி - Part 1


சூப்பர் ஸ்டாரின் வரலாற்று புகழ் மிக்க 1995 தூர்தர்ஷன் பேட்டியின் முழு தொகுப்பும் கடும் முயற்சிக்கு பின் (செய்தித்தாள் வடிவில்), நமக்கு கிடைத்திருக்கிறது.
நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் இதை பிரசுரிக்குமாறு என்னிடம் பலமுறை கேட்டனர். நான் என்னிடம் வைத்திருக்கும் தொகுப்புகளில் இந்த பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இருந்தது. (13 வருடங்கள் பத்திரமாக வைத்திருப்பது என்ன சும்மாவா? நான் வைத்திருந்த இது தொடர்பான கட்டிங்குகள் எலியார் மற்றும் கரையான் புண்ணியத்தால் சுக்கு நூறாகி விட்டது.) இதனால், இதன் முழு தொகுப்பையும் கடந்த ஒரு வருடமாக தேடிகொண்டிருந்தேன். தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுகொண்டிருந்தேன். மிகவும் பழையது என்பதால், யாரிடமும் இருக்கவில்லை.
ஆண்டுகள் உருண்டோடியதில், இவற்றை சேமித்துவைத்திருந்த பலர், விரக்தியின் காரணமாக தூக்கி போட்டுவிட்டது தெரியவந்தது. மனம் வலித்தது. இருப்பினும் கடும் முயற்சிக்கு பின், இந்த பேட்டியின் தொகுப்பை பத்திரமாக முழுதுமாக வைத்திருந்த ஒருவர் கிடைத்தார். உங்களுக்காக அதை இங்கு அளிக்கிறேன்.
கேள்வி பதிலை படிக்குமுன், அந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி பதிலுக்கு செல்வதற்கு முன்பு அது பற்றிய - முன்னுரைகளே மிகவும் சுவாரஸ்யம் என்பதால் - மேலும் அவற்றை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் - அதையே இன்னும் சில பதிவுகளில் ப்டிக்க இருக்கிறீர்கள்.
தமிழகமே எதிர்ப்பார்த்த பேட்டி
எஸ்.வி.ரமணன் தயாரித்த இந்த கேள்வி-பதில் தொகுப்பின் முழு உரிமையும் தூர்தர்ஷன் வாசம் உள்ளது. இப்போது இருந்தது போல் அன்றைய சூழ்நிலையில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது முடிவை இந்த பேட்டியில் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்ததால், இந்த பேட்டி மிகவும் பரபரப்பாக மக்கள் மதியில் எதிர்ப்பார்க்கப்பட்டது. (அந்த பிரசித்தி பெற்ற கேள்வி பதில் கடைசியாக உங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.) அதே போல் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்த நாள், பத்திரிக்கைகளில் முக்கிய முதல் பக்க செய்தியாக சூப்பர் ஸ்டாரின் கேள்வி-பதில்கள் இடம் பெற்றன. போஸ்டர்களில் ரஜினியின் படத்துடன் தலைப்பு செய்தியாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட அன்றைய நாளில் வெளியான தினசரிகளில் அனைத்திலும் இந்த கேள்வி-பதில் தொகுப்புகள் வெளிவந்தன.
சூப்பர் ஸ்டார் நடத்திய பந்த்
இந்த பேட்டி ஒளிபரப்பான 12/12/1995 மற்றும் 13/12/1995 அன்று மொத்த மக்களும் டி.வி. பெட்டிகள் முன் குழுமிவிட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் பேட்டி ஒளிப்பரப்பான நேரம் அறிவிக்கபடாத பந்த் போல் காணப்பட்டது. அன்றைய அ.தி.மு.க அரசின் புண்ணியத்தால் பல இடங்களில் பேட்டி ஒளிபரப்பான நேரம் மின் தடை செய்யப்பட்டது. பல தடைகளை மீறி அப்போது மத்தியில் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக இருந்த, திரு.சங்மா அவர்களின் முழு ஒத்துழைப்போடு பேட்டி ஒளிபரப்பட்டது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியின் இயக்குனர் திரு எஸ்.வி.ரமணனை தாக்க அவர் அலுவலகத்துக்கு ஆடோக்களில் வன்முறை கும்பல்கள் வந்தன. இத்தனை தடைகளையும் தகர்த்து இந்த பேட்டி ஒளிபரப்பானாது.
ஏன்…ஏன்…ஏன்…பல புரியாத புதிர்களுக்கு விடைகள் கிடைத்தன…!!
ரசிகர்களை ஏன் அவர் சந்திப்பதில்லை, ஏன் இமயமலைக்கு அடிக்கடி போகிறார், ஒவ்வொரு படம் முடிந்த பின்னர் வெளிநாட்டு பயணம் ஏன் இப்படி பல கேள்விகளுக்கு மிகவும் அருமையான பதிலை அவர் கூறியிருப்பார்.
தமிழன் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே? நீ எப்போ தான்யா அரசியலுக்கு வருவே? தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டுமா அல்லது மன்னிக்க வேண்டுமா? - இது போன்ற - எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் இதில் சூப்பரான பதிலை கூறியிருப்பார்.
மொத்தத்தில் ரஜினியின் இமேஜை பல மடங்கு மக்கள் மத்தியில் உயர்த்திய நிகழ்ச்சி இது.
……………………………………அடுத்த பதிவில் தொடரும்…………………………………………

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...