அமெரிக்காவில் 'ஐஸ்' குளிர்ந்தது ரஜினியின் மனசு
கோடம்பாக்கம் ஏரியாவில் நேற்று அறிமுகம் ஆன சுள்ளானிகள் கூட, 'ரஜினி சார் கூட ஜோடியா நடிக்கணும்' என்று மத்தாப்பூ கொளுத்துகிறார்கள். ஸ்ரேயாவாகட்டும், நயன்தாராவாகட்டும், முன்னணி நடிகைகளின் கண்களும், கால்ஷீட்டும் ரஜினிகாந்த் என்ற காந்தத்தை குறி வைத்தே நகருகின்றன. இப்படி எல்லா நடிகைகளின் மனசையும் ஆட்டுவிக்கும் ரஜினிக்கு, ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பதுதான் லட்சியமாக இருந்திருக்கிறது.
பாபாவில் விழுந்த இந்த ஆசை விதை, லேசாக முளை விட்டு இலை பரப்ப, இப்போதுதான் நேரம் வாய்த்திருக்கிறது. அதிலும் 'சிவாஜி' படத்தை எடுக்கும்போது சற்று சீரியஸ் ஆகவே ஐஸ்சுடன் ஜோடி சேர முயற்சித்தார் ரஜினி. இதற்காக ஷங்கர் கடும் முயற்சி எடுத்தும், அது நிறைவேறாமலே போனது. ஆனால், இந்த முறை சிக்கிவிட்டார் ஐஸ்.
'எந்திரன்' படத்திற்காக அமெரிக்காவுக்கு பறந்த நாற்பது பேரில் ஐஸ்சும் இருந்தார். தென் அமெரிக்காவில் தமிழ் சினிமா மட்டுமல்ல, வேற்று மொழி சினிமாக்களும் இதுவரை பார்த்திராத லொக்கேஷன்களில் இரண்டு பாடல்களை எடுத்துவிட்டு இந்தியா திரும்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இன்று பத்திரிகை விளம்பரங்களில் வந்திருக்கும் கிராபிக்ஸ் ரஜினியின் கையில் கலர்புல் ரோஜா! தமிழ்சினிமாவை பொருத்தவரை எப்போதுமே ரஜினிதானே கலர்புல் ராஜா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment