நண்பர்களே, தினமலர் செய்தி குறித்து நான் சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
நான் கூட இன்று காலை மற்ற நாளிதழ்கள் வாங்கும்போது தினமலர் செய்தியை பார்த்தேன். ஆனால் அது எந்த விதத்திலும் என்னை பரவசப்படுத்தவோ, ஆர்வமூட்டவோ இல்லை. காரணம் இது போன்ற செய்திகளை தினமலரில் பல முறை நான் பார்த்துவிட்டேன். போஸ்டரை பார்குபோதே இது உண்மையா அல்லது பரபரப்புக்கு கிளப்பிவிடப்படும் டகால்டி செய்தியா என்று ஓரளவு கண்டுபிடித்துவிடுவேன். எனக்கே நம்பிக்கை வராத செய்தியை எப்படி நான் உங்களுக்கு சொல்வது? அதுவும் இது போன்ற டாப் எதிர்ப்பார்ப்பை கூட்டும் செய்தியை?
தினமலர் நாளிதழ் ரஜினிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து பல காலம் ஆகிவிட்டது. ரஜினி பற்றி அவதூறான பல செய்திகள் வெளியிட்டு, அவரது அரசியல் பிரவேசம் பற்றி அடிக்கடி தேவையற்ற வீண் பரபரப்பு செய்திகள் வெளியிட்டு மக்களுக்கு அவரது அரசியல் பிரவேசத்தின்மீதே வெறுப்பு வரும்படி செய்ததில் தினமலருக்கு பெரும் பங்குண்டு.
காரணம் அவர்கள் ஆராதிக்கும் (ஜால்ரா அடிக்கும்) இன்னொரு நடிகர் கம் அரசியல்வாதியின் ஆதாயத்திற்காக.
சென்றவாரம் தினமலர்-வாரமலரில்கூட அந்துமணி கேள்வி-பதில் பகுதியில் ரஜினி பற்றிய ஒரு கேள்விக்கு நம் மனம் மிகவும் புண்படும்படி ஒரு பதில் கூறப்பட்டிருந்தது. (அந்துமணி அந்த நடிகர் கம் அரசியல்வாதியின் மிகப்பெரிய விசிறி என்பது உங்களுக்கு தெரியுமா? )
ரஜினி பற்றி எந்த செய்தி வெளியிட்டாலும் அதில் ஒரு ஓரத்தில் அவர்களின் வேலையை காட்டுவது என்பது தினமலருக்கு வழக்கமானது தான். இப்படியிருக்கையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி ஒரு பரபரப்பு செய்தியை முதல் பக்கத்தில் அதுவும் முக்கிய தலைப்பு செய்தியாக வெளியிட்டதன் உள்நோக்கம் தெரியவில்லை.
சரிந்துவிட்ட விற்பனையை ஈடுக்கட்ட இது போன்ற வேலைகளில் இறங்கியிருப்பார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
உண்மையில் நடந்தது என்ன?
இந்த மாதம் நான்காம் தேதி சென்னை மாவட்டத்து ரசிகர்கள் ரஜினியை சந்திப்பதாக இருந்தது உண்மை. ஆனால் மற்ற மாவட்டத்து ரசிகர்கள் தங்களையும் ரஜினி சந்திக்க வேண்டும், சென்னை ரசிகர்கள் மட்டும் என்ன உசத்தியா? என்று போர்க்கொடி தூக்க, பல மாவட்ட ரசிகர்கள் தன்னை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்க ஒரு மாவட்டத்து ரசிகர்களை மட்டும் பார்ப்பது தவறு என்று ரஜினி அந்த சந்திப்பையே ஒத்திவைத்துவிட்டார்.
சத்தியுடன் ரஜினி நடத்திய ஆலோசனையில், எந்திரனின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்தவுடன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியவுடன் ஏதாவது ஒரு விடுமுறை நாளில் அனைத்து மாவட்டத்து ரசிகர்களின் சந்திப்பை ராகவேந்திர மண்டபத்திலேயே வைத்துகொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட சத்தி, “தலைவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பார். அப்போது அவரிடம் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்” என்று மட்டுமே கூறியிருக்கிறார். இது தான் கை கால் முளைத்து இன்று பத்திரிக்கைகளிலும் தினமலரிலும் வந்துள்ளது. மற்றபடி ரஜினிய் அரசி்யலுக்கு வரப்போவதை பற்றி எதுவும் சொல்ல போவது இல்லை. எதற்கு வீணாக உங்களை உசுப்பேற்று வானேன் ?
மேலும் அரசியலுக்கு வருவதை பற்றி சூப்பர் ஸ்டார் அறிவிக்கவோ அல்லது அது குறித்து முடிவெடுக்கவோ இது சரியான நேரம் இல்லை. அவசியமும் இல்லை. இந்திரன் படம் துவங்கிவிட்ட நிலையில் ரஜினி அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார். பெரும்பாலான ரசிகர்கள் தற்போது உடனடியாக எதிர்ப்பார்ப்பது ரஜினியை பார்ப்பது மட்டுமே. அரசியல் வற்புறுத்தல் எல்லாம் அதற்க்கு அப்புறம்தான்.
ஆனால் மேற்கூறிய தினமலர் செய்தி எந்தவித எதிர்மறை தகவலும் இன்றி மிகவும் நீட்டாக பாசிடிவ்வாக வந்ததே “இது உண்மையாக இருக்குமோ?” என்று பலரின் ஐயத்திற்கு காரணமாகிவிட்டது.
தினமலரில் இருக்கும் ஒரு சில நல்ல பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் சில சமயம் ரஜினி பற்றி நல்ல செய்திகள் வருவதுண்டு. ஆனால் அந்த பத்திரிக்கையின் கொள்கைகளுள் ஒன்று - தீவிர ரஜினி எதிர்ப்பு தான்.
ஒன்றே ஒன்று மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்… ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எந்த பத்திரிக்கையாவது கூறினால் அது ஒரு விற்பனை தந்திரம். வந்துவிட்டால் அது ஒரு சரித்திரத்தை மாற்றக்கூடிய மாபெரும் நிகழ்வு. அவ்வளவே…
புரிந்ததா?

No comments:
Post a Comment