பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு- கலாவதி தம்பதியின் மகன் பார்த்தசாரதி என்ற பிரபு. இவர் சாந்தனு நடித்த “சக்கரக்கட்டி” படத்தை டைரக்டு செய்துள்ளார். பிரபுவுக்கும், வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என். ராஜேந்திரன்-சாந்தலட்சுமி மகள் இரா.சரண்யாவுக்கும் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் (MRC) சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது நினைவிருக்கலாம். அதன் விஷேஷ புகைப்பட தொகுப்பை கூட நாம் அளித்திருந்தோம்.
சூப்பர் ஸ்டாரை மையமாக வைத்து அங்கு நடந்த சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு தற்போது கொண்டு வருகிறேன். (ஜஸ்ட் இந்த போட்டோவையெல்லாம் பாருங்க. அதுவே போதும்.)
முன்தினம் மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சத்யராஜ், கார்த்தி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். டைரக்டர்கள் கே.பாலச்சந்தர், ஷங்கர், விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர்கள் ராமநாராயணன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் ஆகியோரும் வாழ்த்தினர்.
திருமணத்துக்கு வந்தவர்களை எஸ்.செல்வம், கலைப்புலி தாணு, எம்.பாலசுந்தரம், பி.குமார், பி.பாஸ்கர், எஸ். முரளி, டி.பரந்தாமன், ஏ.கே. நடராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
* திருமணத்திற்கு துணை முதல்வர் முதல் தே.மு.தி.க தலைவர் வரை பலர் வந்திருந்த போதும், சூப்பர் ஸ்டார் வந்த போது தான் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
* தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்தை அங்கு தற்செயலாக சந்திக்க நேர்ந்துவிட, அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார். பின்னர் அங்கிருந்த போட்டோகிராபர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த்துடன் சேர்ந்து போஸ் கொடுத்தார். புகைப்படக்காரர்கள் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டனர்.
* அதுவரை அங்கு மற்றவர்களை சுற்றியிருந்த கூட்டம் முழுதும், பிறகு சூப்பர் ஸ்டாரை சூழ்ந்துவிட்டது. அவர் கிளம்புவரை, அவரை சுற்றி கூட்டம் சற்று கூட விலகவில்லை. அவரை யாரும் நெருக்கிவிடாதபடி பத்திரமாக பார்த்துக்கொள்வதர்க்கு பாதுகாவலர்களுக்கும் பி.ஆர்.ஒ.க்களுக்கும் பெரும் வேலையாக இருந்தது.
* பாதுகாவலர்கள் புடை சூழ சூப்பர் ஸ்டார் நடந்து வரும் அழகே தனியாக இருந்தது.
* தம்பதிகளை வாழ்த்த வந்தவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்ற வண்ணமிருந்தனர். அங்கிருந்த குட்டீஸ்கள் யாரையும் லட்சியம் செய்ய வில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் வந்தது தான் தாமதம். எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியவில்லை. “ஐ.. ரஜினி அங்கிள்…. ரஜினி அங்கிள்” என்று வாண்டுகள் ஓடிவர,. அடுத்த சில நொடிகளில், மேடை முழுதும் ஒரே குட்டீஸ்கள் மயம்.
தாணு, சிரித்துக்கொண்டே, “இவங்க எல்லாம் உங்க FANS. உங்க கூட போட்டோ எடுக்காம விடமாட்டங்க” என்று தலைவரிடம் கூற, சூப்பர் ஸ்டார் சிரித்துக்கொண்டே எல்லா குழந்தைகளுடனும் சலிக்காது போஸ் கொடுத்தார்.
* சூப்பர் ஸ்டார் வந்தது அனைவருக்கும் சந்தோஷ அலைகளை ஏற்படுத்தியதால், ஒரு கணம் தாணு கண்கலங்கிவிட்டார். நெகிழ்ச்சியுடன் தலைவரின் கைகளை பிடித்து நன்றி கூறினார்.
* அடுத்த சில கணங்களில் மேடையைவிட்டு இறங்கி வர, மணமக்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் குடும்ப பெண்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாரை காண முண்டியடித்துக் கொண்டு வந்து மேடையை மொய்த்துவிட்டனர். அதில் ஒரு பெண் சட்டென்று அவர் காலில் விழ, மறுக்காது அவரை வாழ்த்தி தூக்கிவிட்டார் தலைவர்.
* படியிலிருந்து இறங்க முற்படும்போது பலர் தங்கள் மொபைலில் சூப்பர் ஸ்டாரை போட்டோ எடுக்க முண்டியடித்தனர். (இணைக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்!).
* மேற்படி கூட்டம் லிப்டில் சூப்பர் ஸ்டார் ஏறியபோது கூட விடாமல் பாலோ செய்ய, செக்யூரிட்டிகள் வந்து அவரை வளையம் வைத்து அழைத்து சென்றார்கள்.
தலைவருக்கு வயசு ஏற ஏற அவரோட MASS ம் CRAZE ம் கூடிக்கிட்டே தான் போகுது. ஏன்னா… இது இறைவன் கொடுத்த வரமப்பா. அது இறுதி வரைக்கும் வருமப்பா!
https://youtu.be/rJZ4syNL4Ds
ReplyDelete