சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!
கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க். ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார். அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய. எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம். குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்? குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)? காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள். குடித்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்! ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment