எந்திரன் படப்பிடிப்பு

சிவாஜி படத்தின் கசப்பு இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது ஷங்கரிடம். சென்னையில் ஓரிடத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை, தனது காஸ்ட்லி செல்போன் மூலம் படம் எடுத்த ரசிகர் ஒருவர், பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டார். திடுக்கிட்ட ஷங்கர் அந்த காட்சியை வேறு காஸ்ட்யூம்களுடன் ரீ ஷ§ட் செய்து படத்தில் சேர்த்தார். ஆனால், இந்த யுக்தி பாடல் காட்சிகளில் எடுபடவில்லை. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியை செல்போனில் சுட்டு, அப்படியே இன்டர் நெட்டில் உலவ விட்டு ஷங்கருக்கு தலைவலியை கொடுத்தார்கள் சில ரசிகர்கள். வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்ட ஷங்கர், இந்த முறை உஷாராகிவிட்டார்.
பிரேசிலில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடக்கும் எந்திரன் படப்பிடிப்பில் ஏராளமான தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம். வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் க்ளிக்கி விடாதபடி கவனமாக இருக்கிறார்களாம் இவர்கள்.
பொது இடங்களில் படப்பிடிப்பு நடந்தால் எடுப்போம். அதை தடுக்க உங்களுக்கு உரிமையில்லை என்று சண்டை போடும் நாடுகளுக்கு இன்னும் இவர்கள் போகவில்லை. அப்படி போகும்போது இன்டர்நெட்டில் எந்திரன் ஸ்டில்களையும் பார்க்கலாம். ரசிகர்கள் அதுவரை பொறுத்தருள்க!
-ரங்கீலன்

சிவாஜி இந்தி பதிப்புக்காக மீண்டும் நடிக்கிறார் ரஜினி


ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார். ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் தயாரித்த `சிவாஜி' படம், கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி திரைக்கு வந்தது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் 75 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் முடிவு செய்து இருக்கிறார்கள். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபு கூறியதாவது:- சிவாஜி படம் தென்னிந்தியாவைப் போலவே வட இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து, இந்த படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட, ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்தி பதிப்புக்காக, படத்தின் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இதற்காக, மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மூன்று அல்லது நான்கு நாட்கள் நடிப்பார். இந்தி படமாக இருந்தாலும், தனக்காக வேறு ஒருவர் குரல் கொடுப்பதை ரஜினிகாந்த் விரும்ப மாட்டார். எனவே அவரே இந்தியில், `டப்பிங்' பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இந்தி படங்கள் இரண்டரை மணி நேரம்தான் ஓடும். `சிவாஜி' மூன்று மணி நேர படமாக இருக்கிறது. எனவே படத்தின் நீளத்தை குறைத்து, இரண்டரை மணி நேர படமாக மாற்ற தீர்மானித்து இருக்கிறோம். இந்தி பதிப்புக்கான வசனத்தை ஸ்வானந்த் கிர்கிரே எழுதி வருகிறார். அக்டோபர் மாதத்துக்குள் அவர் வசனத்தை எழுதி முடித்து விடுவார். தீபாவளி கழித்து, இந்தி மொழிமாற்ற படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு மொழிமாற்ற படத்தை பண்டிகை சமயத்தில் திரையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.'' இவ்வாறு பாபு கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...