சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்?


சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.நினைத்தாலே இனிக்கும் படத்தோடு இணைந்து நடிப்பதை விட்டனர் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும். அதன்பின்னர் இருவரும் தத்தமது ஸ்டைலில் சூப்பர் ஸ்டார்களாகி விட்டனர். இன்று வரை இவர்களது இடத்திற்கு பொருத்தமான யாரும் வரவில்லை.இருவரும் தத்தமது ஸ்டைலில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் திரை விருந்துகள் இன்னும் ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டவில்லை. அவர்களுக்கும் சலிப்பு வரவில்லை.இந்த நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளன. கே.பாலச்சந்தர் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.பாரதிராஜா இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள். அதற்கு இளையராஜா இசையமைப்பார் என்றும் கூட பேச்சு வந்தது. வைரமுத்துதான் இப்படத்துக்கு பாடல்கள் எழுதப் போகிறார் என்று கூட கூறப்பட்டது. அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமலை வைத்து ஒரு புதிய பேச்சு கிளம்பியுள்ளது. சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கமலும், ரஜினியும் இணையப் போவதாக அந்தத்தகவல் கூறுகிறது. சிவாஜி குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளாக உள்ளவர்கள் ரஜினியும், கமலும். எனவே சிவாஜி பிலிம்ஸுக்காக அவர்கள் நடிப்பார்கள் என்றசெய்தி நம்பும்படியாகவே உள்ளது.இருப்பினும் இதுகுறித்து சிவாஜி பிலிம்ஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆமோதிப்பும், மறுப்பும் வெளியிடப்படவில்லை.எனவே இது உண்மையா அல்லது மேலும் ஒரு வதந்தியா என்பது நாளடைவில் தெரிய வரும்

தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்!(Enthiran Rajini & Aishwarya Shankar Deepavali)


தீபாவளிக்கு 'எந்திரன்' ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம்ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.அதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம். தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...