பா படம்... ரஜினி விருப்பம்


பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.சென்னையி்ல் நேற்று முன்தினம் பா திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினி. அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்தப் படம் பார்த்தனர்.படம் பார்த்து விட்டு, கருத்து தெரிவித்த ரஜினி, "அமிதாப் எப்போதுமே அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்து வந்துள்ளார். மொழிகளைத் தாண்டி இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார்.இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, "அதுபற்றி இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது" என்றார் ரஜினி.ரஜினி நடித்தால் கண்டிப்பாக அது 'சூப்பர் பா'..!

ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை: ஸ்ரேயா


ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.அதற்கான வாய்ப்பை அவர் தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அவருடன் மீண்டும் எத்தனை படங்களிலும் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா...நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,நான் பார்த்தவர்களிலேயே தலை சிறந்த மனிதர் ரஜினி தான். மூன்று படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தது எனக்குப் பெருமை.தமிழ் சினிமாவில் எத்தனை இளம் ஹீரோக்கள் இருந்தாலும் எப்போதும் இளம் ஹீரோ ரஜினி தான். ரஜினி இருக்கும் தமிழ் சினிமாவில் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன்.பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ஆண்டவன் எல்லா ஆசிகளையும் வழங்கட்டும் என்று பிரார்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...