எந்திரன்..ஐஸ்வர்யா புளகாங்கிதம்


வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பட வாய்ப்புகளில் ஒன்று எந்திரன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு பத்திரிகை மற்றும் சேனல்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். எந்திரன், ராவண் இரண்டுமே எனக்கு மிக மிக முக்கியமான படங்கள். எந்திரன் விஞ்ஞானப் படம். ரஜினி யின் ஜோடியாக நடித்துள்ளேன்.மிக நீண்ட நாள் தள்ளிப் போய்க்கொண்டிருந்த விஷயம் நாங்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது. நடித்த பிறகுதான், ஏன் அப்படி தள்ளிப்போனது என அடிக்கடி கேட்டுக் கொள்வேன். அபிஷேக் அடிக்கடி இப்படிச் சொல்வார்..."ஒரு நல்ல வாய்ப்பு அமைவதற்காகத்தான் தள்ளிப் போனதாக எடுத்துக் கொள்" என்று.ரஜினி ஒரு மகத்தான கலைஞர் . பெருந்தன்மையானவர். எனது சினிமா அனுபவத்தில் நான் எங்குமே அவரைப் போன்ற ஒரு கலைஞரைப் பார்த்ததில்லை. எந்திரன் புதிய சாதனை படைக்கும் என்பது, இமய மலை உயரமானது என்று சொல்வதைப் போல!ராவண் என் மனதுக்கு நெருக்கமான இன்னொரு படம். என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம். வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக ராவண் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது..." என்று கூறியுள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...