மன்றத்தின் மூலமாக ரஜினி அவர்கள் பற்றிய நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் மட்டுமன்றி, சமூகப் பிரச்னைகள் பலவற்றுக்கும் கூட இவர் முன் நின்று போராடியிருக்கிறார். மன்றங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமை உணர்வுடன் பல நிகழ்ச்சிகளை அனாயசமாக தனி மனிதாராக முன்னின்று நடத்தியிருக்கிறார். தோற்றத்தில் சற்று கரடு முரடாக தெரிந்தாலும் பழகுவதில் இனியவர் நண்பர் ஆதிமூலம்.
தலைவர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் பூரண குணமடைந்து சமீபத்தில் திரும்பிய நாள் வரை பல நிகழ்ச்சிகளை நடத்திவிட்டார் ஆதிமூலம். தற்போது தலைவர் பூரண நலம் பெற்று திரும்பியதையடுத்து, நேர்த்திக்கடன் பிரார்த்தனைகளை செலுத்திவருகிறார்.
அவர் இது காரும் செய்த, பிரார்த்தனைகள் மற்றும் சமூக பணிகள் குறித்த ஒரு பதிவு இது. நல்ல முயற்சிகள் நிச்சயம் உலகிற்கு தெரியவேண்டும் என்ற சொற்றொடருக்கு ஏற்ப இவர் செய்த நடத்திய நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை சற்று தாமதமானாலும் இங்கு தருகிறேன்.
அம்மனுக்கு சிறப்பு பூஜையும் , அன்னதானமும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நலம் பூரண குணம் அடைந்ததையொட்டி புனே மாவட்டம் சிவாஜி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் , அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . தற்போது உடல்நலம் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதையொட்டி நேர்த்திக்கடனாக புனே மாவட்டம் தாவ்ரே காலனி ரோடு, சவரிகடே பஸ் டெப்போ அருகில், புனே சீவ்தர்ஷன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வைத்து ஞாயிறு (26 -06 -2011) மதியம் 2 மணியளவில் அன்னதானம் வழங்குதல், ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும் புனே மாவட்டம் சிவாஜி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மராத்திய மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணிமன்ற தலைவர் தளபதி எஸ்.கே. ஆதிமூலம் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மும்பை வடமத்திய மாவட்ட படையப்பா ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் v.அர்ஜுன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக பகுதி சமூக சேவகரும் N .C .P -யை சேர்ந்த சசிகாந்த் தாப்கிர் , கோவில் தர்மகர்த்தா காளியப்பா கந்தசாமி (எ) மொட்டையன் உட்பட பலர் கலந்து கொள்ள இதற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவர் குமார் , துணை தலைவர் கே.ஆபோய் செயலாளர் v . கிருஷ்ணன் துணை செயலாளர் கே.கணேஷ் , பொருளாளர் ஜி.ஷங்கர் துணை பொருளாளர் கே.முருகன் அமைப்பாளர் R.மாரியப்பன் ஆலோசகராக M.மணியா R .தம்பி , சஞ்சய் நாயக் , C .அபா கே.தூங்கா , எம்.மோகன் , எஸ்.நவீன் , எஸ் முருகேஷ் , எஸ் கணேஷ் , கே.செல்வன் , R .சூரச் .D .சுரேஷ் , ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தலைவர் நலனுக்காக நடைபெற்ற பூஜைகளின் முழு விபரம்
உலக சூப்பர் ஸ்டார் தலைவரின் உடல் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் நடந்த பூஜைகளும், நலம்பெற்றதையொட்டி நடைபெற்ற பூஜைகளின் விபரம்.
14-05-2011 அன்று காலை 8 மணி அளவில் செம்பூர் செட்டநகர் ஸ்ரீ ஆதி சக்தி மாரியம்மன் கோவில் பாலாபிசேகம் , சிறப்பு பூஜை
17-05-2011 அன்று மாலை 4 மணியளவில் டிராம்பே ,சீத்தகேம்ப், கே.செக்டார் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை.ஏற்பாடு: பாட்சா ரஜினி மன்றம் , A .ரஜினி மணிகண்டன் , ஆசிரியர் முருகன், மணி B.M.C.
19-05-2011 அன்று மாலை 4 மணியளவில் மாஹிம் ரயில் நிலையம் அருகில் தாராவி சித்தி விநாயகர் கோவில் தன்வந்திரி பூஜை, கணபதி ஹோமம் , மகாயாகம் பிரசாதம் வழங்குதல்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் மூர்த்தி பிள்ள (சிவாஜி மன்றம் மகாராஷ்டிரா) அய்யா K.V.அசோக் குமார் சேட் (மஹா கணேசர் கோவில் தாரவி ) பாலா (மனித உரிமைகள் கழகம் மகாராஷ்டிரா ) பாலா தேவர் (சரவணா பிலிம்ஸ் ) மற்றும் தலைவர் ரசிகர்கள்.
21-05-2011 அன்று மாலை 5 மணியளவில் ஒர்லி மதராச்வாடி ஸ்ரீ மகா கருமாரியம்மன் கோவில் , பொங்கல் படையல் சிறப்பு பூஜை. ஏற்பாடு : சூப்பர் ஸ்டார் ரஜினி நற்பணி மன்றம் அறக்கட்டளை ரசிகைகள்.
22-05-2011 அன்று காலை 9.30 மணியளவில் முலுண்டு மேற்கு , மெகுல் திரையரங்கம் அருகில் ஸ்ரீ மார்கண்டேஸ்வரர் சிவன் கோவில் பாலாபிசேகம், தன்வந்திரி பூஜை, கணபதி ஹோமம், அன்னதானம்.
சிறப்பு விருந்தினர் :மாண்புமிகு சஞ்சய் தினா பாட்டில் M .P (தாயாருடன்) அரசியல் பிரமுகர்கள் பல்வேறு மன்ற கிளை நிர்வாகிகள் ஏற்பாடு: A.டேவிட் ராஜா , சாதிக் ரஜினி – அண்ணாமலை ரஜினி மன்றம்
நாளும் பொழுதும்: 14 -06 -2011 -ம் தேதி அன்று மாலை 5 .30 மணியளவில் (செவ்வாய்)
இடம்: வில்லே பர்லே (W), நேரு நகர் எண்-5, சாரதா மித்ரா மண்டல், ஸ்ரீ மாரியம்மன் கோவில்
நிகழ்வு: மகளிர் மற்றும் குழந்தைகள் -51 பால் குடம் சுமந்து ஊர்வலம், மேளா தாளாம் முழங்க கொட்டும் மழையில் நகர்வலம், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜை, கூழ் உற்றுதல்.
சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு அசோக் பாவ் ஜாதவ் MLA தொழிலதிபர்கள் ம.செல்வம் ராஜா பரமேஷ் மற்றும் பலர் ஏற்பாடு ; அர்ஜுன், சக்தி படையப்பா ரஜினி ரசிகர் மன்றம்.
சமூகப் பணி – ஏழைப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்ட மன்ற தோழர்கள்
ஸ்ரீ பத்மபூசன் அன்பு தலைவர் உடல் நலம் பூரண குணம் அடைந்ததை ஒட்டி இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏழை பெண் அன்புவல்லி ரவி வயது 30 அவர்கல்லுகு அறுவை சிகிச்சை காக மன்றத்தின் சார்பாக 25000,15000,35000 காசோலை வழங்கப்பட்டது.
செம்பூர் செட்ட நகர் முருகன் கோவிலில் புனே மாவட்டம் ரஜினி மன்றம் சார்பாக சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது ..
இந்த நிகழ்ச்சி அணைத்து பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது.
இம்மன்றம் கடந்த 23 ஆண்டுகளாக 150 கிளை மன்றங்களை தாங்கி கொண்டு அரவணைத்து 24 மணி நேரமும் சமுக சேவைகளில் சாதனை படைத்து வருகின்றது.
Complete Gallery of Mahrashtra State Fan club’s events on Thalaivar recovery
No comments:
Post a Comment