சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் – குமுதம் ஆஹா FM வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்! – B’day Spl 1

சூப்பர் ஸ்டாரின் 61 வது பிறந்த நாள் வருகிற, டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வருகிறது. (இந்த ஆண்டு டிசம்பர் 12 சூப்பர் ஸ்டார் தனது 62 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.) ரசிகர்கள் இதை தடபுடலாக கொண்டாட ஒரு புறம் தயாராகி வரும் நிலையில், சில தனியார் தொலைக்காட்சிகளும் FM ரேடியோக்களும் தங்கள் பங்கிற்கு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது.

எந்திரனின் வெற்றிக்கு பிறகு – அது ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் – இந்த பிறந்த நாள் வருவதால் தலைவருக்கு இது மிகவும் விசேஷமான பிறந்தநாளாகும்.

சென்ற ஆண்டு, SS Music Tv வழங்கிய சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நமது தளம் முன்னின்று ஒருங்கிணைப்பு செய்து, வெற்றிகரமாக நடத்த உதவியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டு, ‘ஆஹா FM 919.9′ சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை திகட்ட திகட்ட டிசம்பர் 12 அன்று முழுதும் வழங்கவிருக்கிறது. பல போட்டிகளை அன்று முழுதும் நடத்தவிருக்கிறது.

Aaha Fm Contest J 640x450  சூப்பர்  ஸ்டாரின் பிறந்த நாள் – குமுதம் ஆஹா FM வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்! –  B’day Spl 1

Double Click too Zoom

சூப்பர் ஸ்டார் போல பேசுபவர்களுக்கு தங்கள் திறமையை காட்ட போட்டி ஒன்று இருக்கிறது. தவிர பாடல், பன்ச் டயலாக் போட்டி என பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன. (www.aahaafm.com)

இதோ அவை தொடர்பான போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். தங்கள் நண்பர்களுக்கு சொல்லலாம்.

இதர மீடியாவின் சூப்பர் ஸ்டார் கொண்டாட்டங்கள் தொடர்பான பிற செய்திகள் அவ்வப்போது உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...