![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQRl2UHmVNJOT-GLjLLq4t9fHDXap5mNDLlPBQ3hkV8zQSEvHnv1aBU-4ir-c1tG06tO4FiZIDAkMI8gY6nO-ZIqJx6-6zfO1bbxL0kUmZyYwrAiLodp33Nkj08SEYk9WgpKoXuSKbloE/s400/Enthiran+_6_.jpg)
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம்.
படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்க
இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது.
பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
பிரிட்டனில்...
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பிரிட்டிஷ் டாப் 10 -ல் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன்
ரஜினியின் சிவாஜி - தி பாஸ் பிரிட்டிஷ் டாப் 10-ல் 9வது இடம் பெற்றது நினைவிருக்கலாம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் சிவாஜிக்கே கிடைத்தது.
No comments:
Post a Comment