சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் கடந்த அக்டோபர் முதல் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு
வசூலில் இந்தியாவின் வேறு எந்தப் படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளதாக செய்திகள்
கேரளா, கர்நாடகாவில் தமிழ்ப் பதிப்புக்கு கிடைத்துள்ள வரவேற்பு அந்த மாநில திரையுலகினரை திகைக்க வைத்துள்ளது.
ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது தெலுங்கு ரோபோ.
இந்த நிலையில், தமிழகத்தில் 1400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள எந்திரன் வசூல் விநியோகஸ்தர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கூறுகையில், "எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் வசூலை எந்திரன் தந்துள்ளது. ரஜினியின் மேஜிக் இது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல... அவரைத் தவிர யாரையும் நம்பி இத்தனை கோடியை விநியோகஸ்தர்களான எங்களால் போடவும் முடியாது. மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களும் திருவிழாவில் இருந்தது போன்ற உணர்வு எங்களுக்கெல்லாம். எனவே அடுத்த மூன்று - நான்கு வாரங்களுக்கு வேறு புதிய படங்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்..." என்றார்.
அபிராமி ராமநாதன் கூறுகையில், "இந்த ஆண்டு சினிமா
அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர். சொல்லப் போனால் அவர்களுக்கு புதிய மரியாதையே கிடைத்துள்ளது, எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு. இரண்டாம் கட்ட நகரங்கள்
தீபாவளிக்கு உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வா குவாட்டர் கட்டிங் உள்பட 6 படங்கள் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மூன்று படங்கள்தான் வெளியாகும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment