சந்தானம் கண்டுபிடித்த வார்த்தை – ரசித்த சூப்பர் ஸ்டார் & Pre-புக்கிங்கில் ஒரு எந்திர சாதனை!

1) சந்தானத்தின் ‘ஜிங்கிளிகா பிம்ப்ளீஸ்’ – ரசித்த சூப்பர் ஸ்டார்!

பெண்களை பார்த்தவுடன் உற்சாகத்தில் இளவட்டங்கள் சில வார்த்தைகளை ஜாலியாக உதிர்ப்பார்கள். அதற்க்கு அர்த்தமெல்லாம் கிடையாது. கேட்பதற்கு விநோதமாக சுவாரஸ்யமாக இருக்கும். எந்திரனில் சந்தானம் நடிக்கும் அது போன்ற ஒரு காட்சிக்கு கச்சிதமாக ஒரு சொல் தேவைப்பட்டது. சில பல காரணங்களுக்காக Figure, Piece போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டனர். புதிய வார்த்தை ஒன்று தேவைப்பட்டது. சந்தானம் கண்டுபிடித்த வார்த்தை என்ன தெரியுமா? ‘ஜிங்கிளிகா பிம்ப்ளீஸ்’.

இந்த வார்த்தை சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துவிட அதை இன்னும் பல முறை சந்தானத்தை உச்சரிக்கும்படி கூறி ரசித்துக் கேட்டாராம்.

அது பற்றி சந்தானம் NDTV-Hindu தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி இது.

வீடியோ

2) எந்திரன் அயல்நாட்டு வெளியீட்டு உரிமை – ஐங்கரன் வசம்!

இந்தியா தவிர்த்து எந்திரனை உலகம் முழுதும் வெளியிடும் உரிமையை ஐங்கரன் நிறுவனம் (எந்திரனின் ஒரிஜினல் தயாரிப்பாளர்) பெற்றுள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தை உலகம் முழுதும் ஐங்கரன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பட விநியோகத்தில் நல்ல அனுபவம் பெற்றுள்ள ஐங்கரன், எந்திரனை உலகம் முழுதும் வெற்றிகரமாக வெளியிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

(Info courtesy: Kumar)

3) எந்திரன் எத்துனை பிரிண்ட்? சக்சேனா கூறும் சுவாரஸ்யமான தகவல்!

எந்திரன் தெலுங்கு பதிப்பின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சன் பிக்சர்சின் தலைமை செயல் அதிகாரி சக்சேனா, “ரோபோ படம் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த விழாவில் ரோபோ படம் குறித்த ஒரு சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் மிகபெரிய படம் இது. ஹாலிவுட் தரத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். அதற்கென தனியாக ஒரு விழா நடத்தலாமா என்று கூட ஆலோசித்து வருகிறோம். இப்போது உள்ள சூழலில், குறைந்த பட்சம் 2250 பிரிண்ட்கள் போடப்படும். டிமாண்டை பொறுத்து இது இன்னும் அதிகரிக்கும். தெலுங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ள தோட்டம் கன்னா ராவ் இன்னும் தனக்கு எத்துனை பிரிண்ட்கள் வேண்டுமென கூறவில்லை. தமிழில் மட்டுமே 1000 பிரிண்ட்கள் போடப்படும். கேரளா மற்றும் கர்நாடகாவில் படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. அங்கு கூடுதல் பிரிண்ட் கேட்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார்.

எப்படி பார்த்தாலும் எந்திரன் சுமார் 2500 ப்ரின்ட்களுடன் வெளியாகும் என்று தெரிகிறது.

(Info courtesy: Vignesh)

Robot 2  Tidbits # 42 (Endhiran Spl) : சந்தானம் கண்டுபிடித்த  வார்த்தை – ரசித்த சூப்பர் ஸ்டார் & Pre-புக்கிங்கில் ஒரு எந்திர  சாதனை!

4) Pre-புக்கிங்கில் எந்திரன் சாதனை

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே எந்திரன் வெளியாகிறது. அதிக பட்ச பிரிண்ட்கள் போடப்படுகின்றன என்றாலும் படத்தை முதல் நாளிலேயே பார்த்துவிடவேண்டும் என்றா ஆவல் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ப்ரீ-புக்கிங்கில் எந்திரன் சாதனை படைத்தது வருகிறது. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே பர்-புக்கிங் வெப்சைட்டில் (Bookmyshow.com) 1200 டிக்கட்டுக்குகளுக்கு மேல் புக் செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து, பிக்ட்ரீ என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஹேம் கூறுகையில், “சல்மான்கான் நடித்துள்ள டபாங் படம் ஆன்லைன் டிக்கட் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அதே போல, திரையுலகிற்கு ஒரு புத்துணர்ச்சியாக இந்தியாவின் மிகப் பெரிய படமான எந்திரன் ஏற்கனவே வருவாயை ஈட்ட ஆரம்பித்துவிட்டது. படம் வெளிவருவதற்கு இரு வாரங்கள் முன்பே 1000 டிக்கட்டுகளுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளது. அப்போது ரிலீஸ் நெருங்க நெருங்க படம் பார்ப்பதற்கான ஆர்வமும் டிக்கட் விற்பனையும்ம் எப்படியிருக்கும் என்று நினைத்து பாருங்கள்….” என்று சிலாகித்து கூறியிருக்கிறார்.

இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும்!

(Info Courtesy: Soucaldesi)

5) சென்னையில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகி எந்திரன் சாதனை

இன்றைய நிலவரப்படி எந்திரன் சென்னையில் மட்டும் 40 திரையரங்குகளில் வெளியாகிறது. அருகருகே பல தியேட்டர்களில் வெளியாவதால் முதலில் படத்தை சன் பிக்சர்ஸ் சொன்ன பெரிய தொகை ஒன்றை கொடுத்து வாங்க சற்று தயக்கம் கட்டினர் திரையரங்கு உரிமையாளர்கள்.

கடந்த காலங்கில் போணியாகாத நடிகர்களின் பல படங்களை வாங்கி வாங்கி சூடுபட்டு நொந்து நூலாகியிருந்த EXHIBITORS மனதில் ‘சிவாஜி’ பொற்காலம் நிழலாடியது. இதே போல அருகருகே உள்ள தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆனாலும் கலக்ஷனுக்கு எந்த குறையும் வைக்காது வசூல் மழை பொழிந்தது அவர்கள் நினைவுக்கு வந்தது. பல திரையரங்கினர் ஒன்றிற்கு இரு மடங்கு மும்மடங்கு லாபம் பார்த்தனர். அந்த வசந்தகாலம் மனதில் ஒரு ஓரத்தில் நிழலாட எந்த பேச்சும் பேசாது எந்திரனை தங்கள் திரையரங்கிற்கு புக் செய்துவிட்டனர்.

மறுபடியும் சூப்பர் ஸ்டார் படம் வந்தால் தானே இதை நினைச்சிகூட பார்க்கமுடியும் … அடுத்த படம் எப்போது வருமோ… எனவே கிடைக்குற இந்த சான்சை விடக்கூடாது என்று முடிவு செய்து, அருகே உள்ள திரைகளில் வெளியானாலும் அதை பற்றி கவலைப்படாது வாங்கியிருக்கின்றனர் எந்திரனை.

சூப்பர் ஸ்டார் இருக்க பயமேன்!

6) எந்திரனுக்கு “U” கிடைச்சாச்சு!

நாம் நேற்று முன்தினம் கூறியபடியே எந்திரன் நேற்று சென்சாருக்கு சென்று எந்த வித கத்திரியும் படாமல், அனைவரும் பார்ப்பதற்கு ஏற்ற ‘U’ சான்றிதழ் வாங்கி வந்துள்ளது.

அது பற்றிய அதிகாரப்பூர்வ செய்தி இன்றைய தினகரனில் வெளியாகியுள்ளது.

எந்திரன் புதன்கிழமை சென்சாருக்கு செல்லவிருக்கிறது என்ற தகவலை முதலில் சொன்னது நம் தளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ‘U’ சான்றிதழ் பெரும் என்ற தகவலையும் சொன்னது நாம் தான்.

எல்லா பெருமையும் தலைவருக்கே!

Censor News  Tidbits # 42 (Endhiran Spl) : சந்தானம் கண்டுபிடித்த  வார்த்தை – ரசித்த சூப்பர் ஸ்டார் & Pre-புக்கிங்கில் ஒரு எந்திர  சாதனை!

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...