I'm an ardent fan of rajni : Rajni (நான் தீவிர ரஜினி ரசிகன்-எந்திரனைக் காண காத்திருக்கிறேன்: ஆமிர் கான்)


சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், உலக அழகி ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ள எந்திரன் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தை பார்க்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானும் பேராவலாய் இருக்கிறார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நான் இளம் பருவத்தில் இருந்தே ரஜினி சார் படங்களை பார்த்து வருகிறேன். அவர் ஸ்டைல் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நான் அவருடைய தீவிர ரசிகன்.

தற்போது ரோபோவாக அவர் நடித்திருப்பதைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன். எந்திரன் உலக அளவில் பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...