மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு

னது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய பல்வேறு துறையை சார்ந்த பிரக்முகளுக்கும் வி.ஐ.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை விடுத்திருக்கிறார். ரசிகர்களையும் அழைத்து விருந்து வைக்க பரிசீலித்துவருவதாக கூறியிருக்கிறார்.

Rajini Solo VM  640x699  மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க  பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு

இன்றைய தினகரன் மற்றும் தினத்தந்தியில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

எனது மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், பரிசுப் பொருட்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் மத்திய & மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக கலைஞர்கள், தொழில் அதிபர்கள், விழா சிறப்பாக நடக்க உதவிய காவல்து¬ றயினர், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக அழைத்து, மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி, விருந்தளிக்க நான் ஆசைப்படுகிறேன். அது முடியுமானால் அதை நிறைவேற்ற நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...