Advance Booking - Tickets sold out in 10 minutes

முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்தது டிக்கெட்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் 'எந்திரன்' படத்திற்க்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் விற்று தீர்ந்ததாக ஜாக்சன் ஹைட்ட்ஸ் என்ற திரை அரங்கத்தின் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகபெரிய சாதனை படைத்துள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் ஒரு வாரம் முன்பு தான் டிக்கெட் முன் பதிவு தொடங்கும். ரசிகர்களின் நச்சரிப்பு தாங்காமல் இரண்டு வாரம் முன்பே எந்திரன் முன் பதிவு தொடங்கிவிட்டது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது தலைவரின் எந்திரன்.

அமெரிக்காவில் 'எந்திரன்' படத்தின் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர். இந்திய மதிப்பு படி 1150 ருபாய். இந்த அளவிற்கு ஹாலிவுட் திரைப்படங்களுக்கு கூட டிக்கெட் விலை இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் படம்னா சும்மாவா ? போட்டு தாக்குங்க தலைவா !!

-விஷ்வா


alt

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...