1) மூன்று லேப்களில் எந்திரன் பிரிண்ட்கள் தயாரிக்கும் பணி
திருவிழாவுக்கான தேதியாக அக்டோபர் 1 தீர்மானிக்கப்பட்டுவிட்டதை அடுத்து எந்திரன் படத்தின் பிரிண்ட்கள் போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதிக பட்ச பிரிண்ட்கள் என்பதால் (இன்றைய நிலவரப்படி 2250) மூன்று நான்கு லேப்புகலாக பிரித்து பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது.
மாறிவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் பல திரையரங்குகள் இருப்பதால், படச் சுருளுக்கு பதிலாக Qube பார்மட்டில் பல திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது. ஆகையால் எந்திரன் ரிலீஸ் ஆகும் திரையரங்குகள் அதிகரித்துவிட்டாலும் படச் சுருளை பிரிண்ட் போடுவது குறைந்திவிட்டது. கிட்டத்தட்ட 60% திரையரங்குகளில் Qube Digital தான்.
தமிழை பொறுத்தவரை சுமார் 350 பிரிண்ட்கள் சென்னையில் ஜெமினி லேப்பில் போடப்படுகிறது. தெலுங்கு பிரிண்ட்கள் (500) ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் உள்ள பிரசாத் ஸ்டூடியோக்களிலும் போடப்படுகிறது. ஹிந்தி பிரிண்ட்கள் மும்பை ஆட்லாப்ஸ்ஸில் போடப்பட்டு வருகிறது.
Qube பார்மட்டில் (digital) மட்டும் சுமார் 1400 பிரிண்ட்கள் போடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2) மலேசியாவில் 80 தியேட்டர்களில் ‘எந்திரன்’ செப்டம்பர் 30 ரிலீஸ்
மலேசியாவில் 80 திரையரங்குகளில் செப்டம்பர் 30 அன்று எந்திரன் ரிலீஸ் ஆகும் என அதன் மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா துரைசிங்கம் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டாருக்கு தமிழகத்துக்கு இணையான செல்வாக்கு மலேசியாவிலும் இருக்கிறது என்பது தெரிந்ததே. படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற்ற பிறகு அது இன்னும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. மலேசிய மக்கள் மிக ஆவலுடன் எந்திரன் ரிலீசை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
(News & Image courtesy: Kana.S.D.)
3) அமெரிக்காவில் டிக்கட் விற்பனை துவக்கம்!
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் டிக்கட் விற்பனைக்கான முன்பதிவு ஆல்ரெடி துவங்கியாச்சு. முதல் நாள் மற்றும் முந்தைய தினத்துக்கான டிக்கட்டுகளை வாங்க அமெரிக்காவில் இருக்கும் நம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ரிலீசுக்கு முன்பாகவே ஏற்பட்டிருக்கும் இந்த டிமாண்டல படத்தின் யூ.எஸ். வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் FICUS நிறுவனம் உற்சாகத்தில் இருக்கிறது.
September 30 night 8.00 PM ஷோ, டிக்கெட் வேலை அமெரிக்கா சரித்திரதுல ஒரு புது சாதனை 40$ (regular) & $50 (VIP row). இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும்!
[END]
No comments:
Post a Comment