ரசிகனுக்கும் ரஜினிக்கும் இருக்கும் உறவு பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.. நம் தலைவரே - 'இது சேர்த்த கூட்டம் இல்லை.. அன்பால் தானா சேர்ந்த கூட்டம்' என்று பெருமையாக கூறி இருப்பார்.
இப்படி அன்பால் சேர்ந்த கூட்டம் தலைவருக்காக எந்த தியாகத்தையும், சிரத்தையும் எடுக்கும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் வேலூர் மாவட்ட ரசிகர்கள்.
சன் பிக்சர்ஸ் திரு. கலாநிதி மாறன் அவர்களின் மிக பிரமாண்ட தயாரிப்பில், திரு. சங்கர் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தலைவர் நம் உயிர் மூச்சான சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் நடித்து விரைவில் வெளியாகும் எந்திரன் சரித்திர திரைப்படத்திற்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டியை கழித்து, இத்திரைப்படம் மாபெரும் உலக சாதனையை படைத்து மாபெரும் வெற்றி பெற வேண்டி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளை சோளிங்கர் என்.ரவி, வேலூர் மாவட்ட பொருளாளர் அவர்கள் தலைமையில், சோளிங்கர் பகுதி ரசிகர்கள் அனைவரும் மூட்டி போட்டே 1305 படிகள் ஏறி, அதன்பிறகு, பெருமாள், தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆன இன்று (18-9-10) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வின் புகை பட தொகுப்பு உங்களுக்காக..
- கணேஷ்.எஸ். என். சோளிங்கர்.
- விஷ்வா -
No comments:
Post a Comment