1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!

சௌந்தர்யாவின் திருமண பரபரப்பில் நாம் அனைவரும் மூழ்கியிருந்தபடியால் எந்திரன் செய்திகளுக்கு சிறிது பிரேக் விட்டிருந்தேன். இனி மறுபடியும் எந்திர ஜாலம் துவங்கும்.

சென்ற வாரம் வெளியான ‘தி சண்டே இந்தியன்’ வார இதழில், எந்திரன் படம் மற்றும் அதன் எதிர்ப்பார்ப்பு, வர்த்தகம், விளம்பரம், சூப்பர் ஸ்டாரின் பங்கு, பிற கலைஞர்களின் பங்கு என எல்லாவற்றையும் கலந்து கட்டியடித்து ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. ஹப்பா… இப்படி ஒரு ஸ்பெஷல் ஆர்டிகிளை படிச்சு எத்தனை நாளாச்சு… (எந்திரன் விருந்து ஒன்னு வருதுன்னு சொன்னனில்ல…இது தாங்க அது!)

Sunday Indian Coverpage  1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி  சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
வெறும் அலசலாக இல்லாமல், பல விபரங்களையும் அளித்திருப்பது இந்தக்கட்டுரையின் சிறப்பு. சன் பிக்சர்சின் CEO சக்சேனா பல தகவல்களை கூறியிருக்கிறார். கவனிக்க.

சௌந்தர்யாவின் திருமண செய்திகள் குறித்த பரபரப்பு அடங்கியதும் இந்த கட்டுரையை வெளியிட தீர்மானித்திருந்தேன். ஆகையால் சற்று தாமதமாகிவிட்டது. (திருமண செய்திகள் குறித்த விஷேஷ பதிவு ஒன்னு தனியாக தயாராகிட்டிருக்கு. அது நம்ம தள ஸ்பெஷல்!)

பொதுவாக இது போன்று அதிகபட்ச எதிர்ப்பார்ப்புக்குரிய திரைப்படங்களை பற்றி விரிவான அலசல் கட்டுரையை வெளியிடும் வேறு ஒரு இதழ், (“இ.டு”) இந்த முறை எந்திரனின் எதிர்ப்பார்ப்புக்களை பற்றியோ அதன் சிறப்புக்களை பற்றியோ வாயே திறக்கவில்லை. அட்லீஸ்ட் வர்த்தக நோக்கத்திற்காக கூட… என்னா வில்லத்தனம்!

அந்த குறையை ‘தி சண்டே இந்தியன்’ போக்கியுள்ளது. மிக அருமையான ஒரு அலசல். இதில் சிறப்பு என்னவென்றால், நமது வாசகரும், நண்பரும், நாகை மாவட்ட ரஜினி மன்ற தலைவருமான திரு.நாகூர் பாரி அவர்களின் கருத்துக்களும் இந்த கட்டுரையில் இடம் பெற்றிருக்கிறது என்பது தான். வாழ்த்துக்கள் பாரி!

எந்திரன் என்ற இந்த மெகா பட்ஜெட் படம் சாத்தியப்பட்டதே ரஜினி என்னும் ஒருவரால் தான். ஆனால் இந்த கட்டுரையில் எந்திரனின் பிரம்மாண்ட உருவாக்கத்திற்கு காரணம், சூப்பர் ஸ்டார், ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரின் கூட்டணி என்ற பொருள்படும்படி ஒரு இடத்தில் கூறப்பட்டுள்ளது. அது இந்த கட்டுரையாளரின் கருத்தல்ல.அது ஒரு மூன்றாம் நபர் கூறியிருக்கும் கருத்தாகும். ஆனால், அதற்க்கு கீழேயே ‘தி சண்டே இந்தியன்’ அதை மறுக்கும் விதமாக தனது கருத்தை கூறியிருப்பதை கவனிக்க தவறாதீர்கள்.

Sunday Indian Enthiran Spl1 640x422  1000 கோடி ஹீரோ  ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!

(Double click the image to ZOOM and READ the text!)

Sunday Indian Enthiran Spl2 640x422  1000 கோடி ஹீரோ  ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!

——————————————————-
Star comment

By Rajini Rasigan: Submitted on 2010/09/05 at 1:36pm

எல்லாம் சரி தான். எந்திரன் இப்படி பிரமாண்டமான உருவெடுப்பதற்கும், 150 கோடிகளில் தயாராவதற்கும், மக்களின் எதிர்பார்ப்பு எகிறி நிற்பதற்கும் ஏ.ஆர். ரஹ்மான், ரசூல், ஷங்கர், சன் டி.வி., ஐஸ்வர்யா ஆகியோருடன் சேர்ந்து ரஜினியும் என்பது போன்று எழுதுகிறார்கள்.

ஐயா.. எந்திரன் இப்படி பிரமாண்டமாக உருவெடுப்பதற்கும், மற்றவர்கள் இதில் இணைந்திருப்பதற்கும், சன் டி.வி. இவ்வளவு முதலீடு செய்ததற்கும், மக்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதற்கும் ஒரே காரணம் – ரஜினி தான்!

ரஜினிக்கு பதிலாக வேறு யாரையாவது இதில் நடித்திருந்தால், ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், ரசூல், சன் டி.வி. எல்லாம் இருந்திருந்தாலும் பத்தோடு பதினொன்றாகத் தான் ஆகியிருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...