எந்திரன் இசை வெளியீடு – பரபரப்பில் மிதக்கும் மலேசியா!

சை வெளியீட்டுக்கு இன்னும் ஒரே வாரம் இருக்கும் நிலையில், மலேசியாவில் இசை வெளியீடு நடப்பதற்க்கான பகிரங்க அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. மறைமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. நிகழ்ச்சியில் பங்கேர்ப்பவர்களின் பாஸ்போர்ட்டுகளின் நகல்கள் பெறப்பட்டுவிட்டன என்பது மட்டும் என்பது இந்த நொடி டெவெலப்மென்ட். (என்ன தான் சொன்னாலும் கேள்விப்பட்டாலும் இந்த மலேசிய நிகழ்ச்சி பத்தி மனசுக்குளே மைல்டா ஒரு டவுட் இருக்கத்தான் செய்யுது…..ம்…)

எந்திரனின் பி.ஆர்.ஓ நிகில் முருகன் தனது ட்விட்டரில் மலேசிய நிகழ்ச்சி குறித்து கூறியிருக்கும் சில வரிகளும், இந்த வாரம் குங்குமம் இதழில் (சன் குழுமத்தின் வெளியீடு) மேலேசிய இசை வெளியீடு பற்றி இடம் பெற்றிருக்கும் பாக்ஸ் செய்தியும் தான் மலேசியாவில் தான் எந்திரன் ஆடியோ வெளியீடு நடக்கும் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அது குறித்த செய்திகளை தயங்காது வெளியிட்டோம்.

புத்ரஜெயா சர்வதேச பொருளாதார மையத்தை (PICC) பொறுத்தவரை, 31 ஆம் தேதி, சன் தொலைக்காட்சியின் மலேசியா பார்ட்னர் ‘ஆஸ்ட்ரோ’ (‘ASTRO’) – புக் செய்துள்ளனர் என்று மட்டும் தெரிகிறது. இதையடுத்து தான் நாம் புத்ரஜெயா பற்றி செய்தி வெளியிட்டோம்.

இதற்கிடையே, பட ரிலீசுக்கு முன்பு காணப்படும் பரபரப்பும், ஆர்வமும் தற்போதே மலேசிய ரசிகர்களிடம் காணப்படுகிறது. மலேசியாவில் எங்கு பார்த்தாலும் இது குறித்து தான் பேச்சு. எப்படியாகிலும் நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துவிடவேண்டும் என்று ரசிகர்கள் அங்கும் இங்கும் பறக்கின்றனர். மலேசியாவில் ஒரு ஸ்டேடியம் விடாது விசாரித்த வண்ணம் உள்ளனர். சூப்பர் ஸ்டாருக்கு மலேசியாவில் நம் கற்பனைக்கு அப்பார்ப்பட்ட செல்வாக்கு உள்ளது என்பது தெரிந்ததே. ‘சிவாஜி’ சுமார் 75 தியேட்டர்களில் இங்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. சிவாஜி படச் சுருள் வர தாமதமாகிவிட்டது என்ற காரணத்திற்க்காக தியேட்டரையே அடித்து நொறுக்கும் அளவிற்கு ரசிகர்கள் இங்கு சென்றுவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். “VENUE குறித்து இப்போதே அறிவித்துவிட்டால் எல்லா ரசிகர்களும் மூட்டை முடிச்சுக்களுடன் இப்போதே அரங்கை நிரப்பிவிடுவார்கள்” என்று கூறுகிறார் நம் மலேசிய நண்பர் கனகராஜ்.

ஊரே, பார்த்து குதூகலிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி குறித்த ஏற்பாடுகள் மறைமுகமாக ஏன் நடந்து வருகிறது என்று சிலருக்கு எழலாம்…

நாம் விசாரித்த வரை, நிகழ்ச்சி நடக்கும் VENUE பற்றி இன்னும் அறிவிக்காமல் இருப்பதில் காரணமிருக்கிறது. நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நடைபெறுமா, அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு CLOSED-EVENT ஆக இருக்குமா என்பது மட்டும் தெரியவில்லை. CLOSED-EVENT ஆக இருக்கும் பட்சத்தில் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள். நேரடி ஒளிபரப்பு செய்து அவர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டும் சன் பிக்சர்ஸ். ஒருவேளை OPEN-EVENT ஆக நடக்கும் பட்சத்தில் சுமார் 3000 பேர் தான் அமர்ந்து பார்க்கமுடியும். 3000 டிக்கட்டுகளை விற்பது கடினமாக இருக்காது, எல்லாவற்றையும் முடிவு செய்தபின் பார்த்துகொள்ளலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கருதியிருக்கலாம்.

எது எப்படியாகிலும் – கலந்துகொள்வோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும் – எந்த நிமிடமும் முறைப்படி அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேதி மாற்றம் & VENUE மாற்றமும் இருக்கக்கூடும்.

உங்களைப் போலவே ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்….

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...