ஷங்கர் இம்முறை தனது பிளாக்கில் செய்திருக்கும் அப்டேட் அடி சும்மா தூள் ரகம். ஷங்கரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் தென்படுகிறது.
இனி சற்று ரிலாக்சாக இருப்பார் ஷங்கர். ஆம்… எந்திரன் படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிந்து பூசணிக்காய் சுற்றி உடைத்துவிட்டார்கள். “இந்த பூசணி உடைக்கிறது இதெல்லாம் எனக்கு புதுசு. என் படத்துல முதல் முறையா அதை செய்திருக்கிறோம்”, என்கிறார் ஷங்கர். (இருக்காதே பின்னே… ஊர்பட்ட திருஷ்டி ஆச்சே…!)
ரஹ்மான் பாடியிருக்கும் கடைசி பாடலின் படப்பிடிப்பு பெருங்குடியில் உள்ள சன் ச்டூடியோசில், ரெமோவின் அசைவுகளுக்கேற்ப படம்பிடிக்கப்பட்டது. பாடல் காட்சி நிறைவடைந்தவுடன், பூசணி உடைத்து படம் நிறைவு செய்யப்பட்டது. எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியான தருணம்.
கிட்டத்தட்ட கிரிக்கெட் மெச்சின் கடைசி ஓவரைப் போல அனைவரும் உணர்ந்தோம். கல்லூரியின் கடைசி நாளை போல மகிழ்ச்சியாகவும் அதே சமயம் கனத்த இதயத்தையும் நான் உணர்ந்தேன். என்னைப் போலவே அனைவரும் உணர்ந்தது ஆச்சரியம்.
ஜூலை 9 ஆம் தேதி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், எந்திரன் யூனிட்டுக்கு விருந்தளித்தார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நான், ரஜினி சார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ரசூல் பூக்குட்டி, எடிட்டர் ஆண்டனி, உள்ளிட்ட படாக்குழுவினர் அதில் பங்கேற்றோம். ஷூட்டிங்கின் போது நடந்த சுவையான அனுபவங்களை திரு.மாறன் அவர்களிடம் பகிர்ந்துகொண்டோம்.
அப்புறம் ஒரு நல்ல சேதி: ரஹ்மான் என்னிடம் நேற்று தமிழ் பாடல்களின் மாஸ்டர் காப்பியை கொடுத்து விட்டார். (கவனிக்க: தமிழ் பாடல்களின்). சும்மா சொல்லக்கூடாது, பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பும் ரகம். அதிலும் அந்த முதல் பாடல்…. வாவ்… ரஹ்மான் ஒரு ஆஸ்கார் வின்னர் என்பதை பறைசாற்றுகிறது. மீண்டுமொரு முறை எங்கள் கூட்டணி உங்கள் எதிர்ப்பார்ப்புக்களை ஈடு செய்யும் என்று நம்புகிறோம். பாடல்களை இம்மாத இறுதியில் வெளியிட முயற்சித்து வருகிறோம்.
——————————————————————————
குறிப்பு 1: பிரம்மாண்ட கேக்கில் எழுதியிருக்கும் வாசகம் என்ன தெரியுமா? எந்திரன் ஷூட்டிங் முடிந்தது. “Endhiran Shoot Wrapped”.
குறிப்பு 2: இங்கு நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் தயாரிப்பாளர் மாறன் அளித்த விருந்தின்போது எடுத்தவை அல்ல. இவை, படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட Farewell Party யின் போது எடுக்கப்பட்டது.
——————————————————————————
இயக்குனர் ஷங்கர் தனது தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்:
Original English Transcript:
Hi Everyone,
Happy to say that the whole Endhiran shoot is wrapped on 7th July with the shooting of the song sung by AR Rahman, choreographed by Remo at Sun Studios. It was a very very happy moment for everyone. I think this is the first film where I am doing the pumpkin breaking pooja (poosanika udaikiradhu) with the lead stars Rajnikanth & Aishwarya Rai.
Everyone had this feeling similar to a cricket last over…. like a 2 year college wrapping day where you feel very happy & also with a heavy heart … I am amused when I see the same feelings in everyone….
Our producer Mr. Kalanithi Maran gave a big party on July 9th for the crew. In the presence of our honorable Central minister Mr. Dayanidhi Maran, I attended the party along with Rajni sir, DOP Rathnavelu, Resul Pookutty, Editor Antony & my crew. We shared all the interesting stories related to the making of the film with Mr. Maran. It was a memorable day for all of us….
A good news… Yesterday morning Rahman gave the tamil songs final mix master to us… it is amazing…rocking, sounding as big & grand as the budget of the movie. The first song clearly indicates that our AR Rahman is an Oscar winner. I hope once again our combination lives up to your expectation levels. And we are planning to release the audio in this month end.
Yours
Shankarwww.directorshankaronline.com
No comments:
Post a Comment