Rajini on TV next?

If reports are to be believed, you could soon catch on screen, a face that has mesmerized millions of Tamilians with a voice and style that still remains inimitable. Yes, the Superstar could soon be on TV asking you, his fans, to catch him soon in Sun Pictures’ Endhiran The Robot'.
The Superstar, who is currently working in Shankar’s ‘Endhiran The Robot’ is said to have agreed to this unique means of promoting his film. He pairs with Aishwarya Rai for the first time in this film, which is being filmed at an estimated cost of Rs 180 crore.
With more than 60 percent of the shooting for the film being completed, the production house is said to be adopting never-heard-of methods to publicise the mega starrer, which also has Academy Award winning music composer AR Rahman working on the movie’s music.
Reports say the production house plans to do this personal invite from Rajinikanth and already has the Superstar’s nod to the project. And given Sun Pictures aggressive promotion campaigns for all their films, it is no surprise that they have come up with such a grand plan to promote their first direct production.

ரத்த தானத்துக்கென்று விஷேஷ தளம் - ரஜினி ரசிகர்களின் பாராட்டத்தக்க முயற்சி

ரசிகர்களுக்குள் ரஜினி எதிர்பார்க்கும் சமூக பொறுப்பும் மாற்றமும் வேகமாக பரவி வருகிறது. அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பமான இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக தென் மாவட்ட ரசிகர்கள் ரத்த தானத்துகென்று ஒரு விஷேஷ தளத்தை www.rajiniblood.com துவக்கியுள்ளனர்.
நெல்லையை சேர்ந்த நம் ரசிக சகோதரர் திரு. தாயப்பன் அவர்கள் தலைமையில் சிவகாசியை சேர்ந்த நண்பர் பொன்ராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இந்த தளத்தை வழிநடத்துவர்.
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுபவர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விபரத்தை இதில் தெரிவித்தால் உடனடியாக ரத்த தானமளிப்பவரின் விபரங்கள் தெரியவரும். (தற்போது இது சோதனை முறையில் இயங்குகிறது. விரைவில் இது முழு மூச்சாக இயங்கும்).
நம் தள விருந்தினர்களும் நண்பர்களும் விருப்பப்பட்டால் தங்கள் பெயரை பதிவு செய்து இந்த சீரிய முயற்சிக்கு தோள் கொடுக்கலாம்.
உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் rajiniblood@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மேற்று முதல் (14/06/09) இந்த தளம் இயங்க துவங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் அநேகம் பேர் இதில் பெயரை பதிவு செய்துள்ளனர். மற்ற மாவட்ட ரசிகர்கள் விரைவில் சேரவுள்ளனர்.
ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த இவர்களை நாம் மனமார பாராட்டுகிறோம்.
நண்பர் பொன்ராஜ் இந்த தளம் தொடர்பாக நம்மிடம் கூறியபோது பலர் அறிந்து பயன்பெறும் பொருட்டு செய்தித் தாள்களில் இது வெளிவர ஆவன செய்வதாக கூறியிருந்தோம். அதன் படி, நமது எளிய முயற்சியின் பலனாக இதோ மாலை மலர் தளத்தில் நம் தளத்தல் வெளியான செய்தி அப்படியே வந்துள்ளது. மாலை வெளிவரும் நாளிதழிலும் இது தொடர்பான செய்தி இடம்பெறும்.
http://www.maalaimalar.com/2009/06/15124546/CNI0330150609.html

நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும், ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் , நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், ராதாரவி, தியாகு, சின்னி ஜெயந்த், வையாபுரி, விஜயக்குமார், நடிகைகள் மீனா, பூர்ணிமா, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஷ்வரி, தயாரிப்பாளர் அமுதா துரைராஜ், தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார்.நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் , ராதாரவி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரத்ததானம்-ரஜினி ரசிகர்களுக்கு இணையதளம்!

ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள். தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர்.www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர்.அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இது முழுக்க முழுக்க இலவச சேவை.உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணைய தளம் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் கூறியதாவது:இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...