Superstar has great respect towards senior actors of the industry and has the habit of giving roles to them in each of his movie. Similarly he has the policy of christening beautiful Tamil names to the characters of his films. Many senior artistes have benefitted because of this, over the years. Because senior artistes would be ridden either by money or decline in films they act. There are many artistes who once had a very prosperous lifestyle but a struggling one now. Similarly one they would have been acting round the clock but have to stay at home now. This is very ridiculous. Superstar knows their problem very well and so he tries to give opportunity to them in his each films as much as possible. Similarly Superstar gave opportunity to veteran actor MN Nambiar and actress Sujatha in his own production Baba. But in Baba there’s another actor who also benefitted in Baba. He is none other than Calcutta Viswanathan who came in a very small role as Superstar’s father in the film. One of the finest actors of Kollywood. He was the one who came as father to Superstar in Moondru Mudichu too. The role of Viswanathan in Baba is a meagre one which lasted only for a few seconds and that too in titles alone. But the price he got for that is unimaginable. Calcutta Viswanathan explains on his own words: “Superstar called me one day and said that he has a small role of his father character in Baba and
whether i would be able to do that with just a few days callsheet. Would anybody hesitate? I agreed happily and gave dates instantly as i was free that time.” Baba shooting - a wonderful experience “During the shooting he treated me with great respect and passion and it was a wonderful experience for me. I was floored by his dedication towards his profession. Success has not gone to his head. It would be a tough thing for others if they are in his place. He treats everybody in the unit with the same respect and equality. Though i acted in the film for a few days it was an unforgettable experience for me.”Later the film got released and unwanted happenings spoilt the film and its run. I heard the film didn’t meet the expectations of the people and buyers incurred heavy loss. I felt very sad. It shouldn’t happen for a good soul like Rajini. What about my salary? In this situation, i was yet to receive my salary for the film. I was expecting it for sometime but it didn’t come. I don’t want to ask Rajini the same as he was already under several problems that time. I decided to keep mum and discard my salary as there was a heavy talk about the film’s loss to buyers. One day, Rajini himself called me over phone and asked me to whether i would be able to meet him. That evening i was at his home. He received me warmly and quarrelled with me in a friendly tone. “Sir, won’t you remind me about your salary? I forgot that because of these tension and hiccups. Very sorry.” “No..sir. I didn’t want to claim my salary at this irrelevant situation. Moreover they say that film incurred loss to buyers and distributors. How can I ask my salary at this juncture and embarrass you…” Wow…an unimaginable salary “No…no..we shouldn’t discard or sacrifice our salary which get by acting. Getting paid for work is our right. Leave the problems. I will take care of them. You just keep this amount. Sorry for the dela,” by saying this, he handed over me a lumpsum amount. I couldn’t beleive my eyes. You know what the amount? Five lakh rupees. Rs.5 lakhs just for a few scenes comprising a few minutes. I didn’t expect this much amount for that small role. In the times where we are deprived of our actual salary even when the film turns superhit, it is heartening to see persons like Rajini who pays the salary promptly and that too more than the actual - even amidst LOSS.
That money was a treasure for me and it was very useful for me that time. Rajni sir is one of the golden souls in the industry and I pray ALMIGHTY to keep him always happy without any troubles. A pleased Viswanathan concluded. ………………………………………………………………………………………………………………ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி! திக்கு முக்காடிய மூத்த நடிகர்!!
நண்பர்களே, தனது படங்களின் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைப்பது போல், தனது ஒவ்வொரு படத்திலும் கூடியமட்டும் மூத்த நடிகர், நடிகையருக்கு வாய்ப்பளிப்பதை சூப்பர் ஸ்டார் கொள்கையாக வைத்திருக்கிறார்.அந்த கொள்கையால் பலனடைந்த மூத்த கலைஞர்கள் அநேகம் பேர் உண்டு.
காரணம் மூத்த கலைஞர்களுக்கு ஒன்று பணக்கஷ்டம் அல்லது படக்கஷ்டம் இருக்கும். ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்துவிட்டு இன்று பணத்திற்காக கஷ்டபடுபவர்கள் ஒரு வகை. இன்னொரு வகை - ஒரு காலத்தில் பிஸியாக இருந்துவிட்டு கடைசி காலத்தில் படங்கள் எதுவும் இல்லாமல் தனிமையில் காலத்தை தள்ளும் கலைஞர்கள்.தனது சொந்த தயாரிப்பான பாபாவில் நம்பியார், சுஜாதா ஆகியோருக்கு சூப்பர் ஸ்டார் வாய்பளித்தார். இதை தவிர அதிகம் அறியப்படாத இன்னொருவரும் அந்த படத்தில் உண்டு.
அவர் தான் கல்கத்தா விஸ்வநாதன். மூன்று முடிச்சு படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவாக வருவாரே…அவர் தான் கல்கத்தா விஸ்வநாதன். பாபா படத்திலும் அவர் ஒரு சில காட்சிகளில் வருவார். சூப்பர் ஸ்டாரின் தந்தையாக, டைட்டிலில் எழுத்து போடப்படும் காட்சிகளில் மட்டுமே அவர் வருவார். அவர் வரும் காட்சிகளின் மொத்த நேரமே ஒரு சில வினாடிகள் தான். ஆனால் அதற்காக அவருக்கு கிடைத்த வெகுமதி இருக்கிறதே…நெஞ்சை தொடுவது அது.
அதை அவரே நம்மிடம் கூறுகிறார்.
“பாபா படத்தில் அவரின் தந்தையாக நடிக்கும் ஒரு பாத்திரம் இருப்பதாகவும், அதை நான் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் ஒரு சில நாட்கள் மட்டும், டேட்ஸ் தருமாறு ரஜினி என்னிடம் கேட்டார். கரும்பு தின்ன கூலியா என்று நான் உடனே ஒப்பு கொண்டேன். சம்பளமெல்லாம் எதுவும் பேசவில்லை.
படப்பிடிப்பில் என்னிடம் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டார் ரஜினி. மூன்று முடிச்சு சமயத்தில் அவரிடம் பார்த்த அதே தொழில் பக்தி இன்று இருந்தது. இவ்வளவு வெற்றிக்கு பிறகும் அவரிடம் ஆணவம் சிறிதும் இல்லை. தன்னை விட வயதில் மூத்தவர்களை மதிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வயதில் சிறிதானவர்களையும் மதிக்கும் பண்பும் அவரிடம் பார்த்து வியந்தேன்.அந்த படத்தில் நடித்தது சில நாட்கள் என்றாலும் அவை என்னால் மறக்க முடியாதது.
பிற்பாடு பாபா படம் ரிலீசாகி விரும்பத்தகாத சில சர்ச்சைகள் ஏற்பட்டன. படம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை என்றும், படம் வாங்கியவர்களுக்கு பெரிய நஷ்டம் என்றும் பேசப்பட்டது. ஒரு நல்ல மனிதருக்கு இத்தனை சோதனைகளா என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
இந்நிலையில், எனக்கு படத்தில் நடித்ததற்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வரவில்லை. ரஜினி சார் இன்று இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதுவும் படம் சரியாக போகவில்லை, பலத்த நஷ்டம் என்று பேச்சு அடிபட்டுகொண்டிருக்கும் இந்த தருணத்தில் எனக்கு என் சம்பளத்தை கேட்க மனம் வரவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டேன்.
திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து போன். என்னை சந்திக்க விரும்புவதாகவும், தன் வீட்டிற்கு உடனே வர முடியுமா என்றும் கேட்டார். நான் அந்த சமயம் சென்னையில் இருந்ததால், உடனே அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன். என்னை அன்புடன் வரவேற்று உபசரித்தார். உரிமையுடன் கோபித்து கொண்டார். “ஏன் சார், நான் தான் உங்களுக்கு படத்துல நடிச்சதுக்கு சம்பளத்தை தர மறந்துட்டேன்ன்னா, நீங்களாவது எனக்கு ஞாபகப்படுத்த கூடாதா? ஐ ஆம் வெரி சாரி!” என்றார்.
“இல்லை சார், நீங்க இருக்குற இந்த இக்கட்டான சூழ்நிலைல எனக்கு அதை கேட்கனும்னு தோணலை. படம் வேற சரியா போகலை, நஷ்டம்ம்னு பேசிக்கிறாங்க. அதனால நான் அமைதியா இருந்துட்டேன். மேலும் நான் ஒன்னு மாசக்கணக்கா ஒரு பெரிய ரோல்ல நடிக்கலியே. ஜஸ்ட் ஒரு ஸ்மால் ரோல் தானே. விடுங்க…” என்றேன்.
“நோ..நோ…நாம் நடிச்சதுக்கு நமக்கு வர வேண்டிய பணத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்க மறுக்க கூடாது. அது நம்ம உரிமை. என் பிரச்னைகளை விடுங்க…அது சரியா போயிடும். நீங்க உங்க சம்பளத்தை வாங்கிகோங்க” என்று கூறி என்னிடம் ஒரு பெரிய தொகையை அளித்தார்.
ஜஸ்ட் ஒரு நிமிசத்துக்கும் குறைவா, நான் வந்த அந்த ரோல்லுக்கு அவர் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஐந்து லட்ச ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை நான் எதிர்பார்க்கவேயில்லை. அதுவும் அந்த சின்ன ரோல்லுக்கு.
படம் வெளியாகி லாபத்தை கொட்டினாலே சொன்ன சம்பளத்தை சரியா கொடுக்க மனம் வராதவங்களுக்கு மத்தியில, நஷ்டத்துக்கு நடுவுல, சொன்னதுக்கும் மேல பணத்தை அள்ளி கொடுத்த ரஜினி சார் ரியலி கிரேட். அந்த பணம் அந்த டைத்துல எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. கிட்ட தட்ட ஒரு புதையல் கிடைச்ச சந்தோஷம் எனக்கு.
“சினிமாவுல இருக்குற நல்ல மனுஷங்கள்ல ரஜினியும் ஒருத்தர். அவர் எப்பவும் எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்,” என்று முடித்தார் விஸ்வநாதன்.
முடிக்கும் போது நெகிழ்ச்சியில் அவர் கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள்.
No comments:
Post a Comment