
தலைவர் சிங்கப்பூரில் இருக்கும்போது அவரது குடும்பத்தினருக்கு மிகவும், உதவிகரமாக இருந்தவர் நடிகை மானு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவருடன் தலைவர் இருப்பது போலவும், அவரது குடும்பத்தினருடன் இருப்பது போலவும், விமான நிலையத்தில் நுழைவது போலவும் ச்டில்ல்க வெளியாகியுள்ளது.

Back home to Chennai..
இந்நிலையில் சென்னையில், தலைவர் ரஜினிகாந்திடம், திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை நலம் விசாரித்தார்.
சென்னை கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணாநிதி, அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடல்நலத்தைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார், கருணாநிதியின் உடல் நலம் குறித்தும், கனிமொழியின் நலம் குறித்தும் விசாரித்ததாக, திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரஜினிக்கா இந்த அவமானம்? – தினமணி
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தலைவரை ரிசீவ் செய்வதில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சிறப்பாக செய்யவில்லை என்றும், தலைவரை இவர்கள் நடத்திய விதம் கண்டு மனம் வருந்துவதாகவும் குற்றம்சாட்டி தினமணி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தியை வாசிக்க:
http://tinyurl.com/6y28z33
[END]
No comments:
Post a Comment