
“வழக்கமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சன்யாசி தோற்றத்தில் வெண்தாடியில் பிரகாசிப்பார் ரஜினி. ஷூட்டிங், போட்டோ செஷன் என்று வந்து விட்டால் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து யோகாவில் ஐக்கியமாகி விடுவார். அதன்பிறகு அவரது முகத்தில் ஒரு தேஜஸ் டாலடிக்கும் பாருங்கள் அப்பப்பா...'' என்று அவரை தினசரி சந்திக்கும் நெருக்கமாக சந்திக்கும் புள்ளிகளே ஆச்சர்யத்தில் வாயடைத்து போகிறார்கள்.
ரஜினியின் மூன்றுவித கெட்டப் போட்டோக்கள் அசத்தல்

'ரானா'வுக்காக சைலன்ட்டாக தீபிகா படுகோன் சென்னை வந்து போட்டோ செஷனில் கலந்து கொண்டார். பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ரஜினி ப்ளஸ் தீபிகா போட்டோக்கள் அனைத்தும் அப்படியே பரமரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறதாம். படப்பிடிப்பு புறப்படும் நாளில் எல்லா மீடியாக்களிலும் வாள் சுழற்றும் ரஜினியின் வண்ணப்படம் வசீகரமாய் ஜொலிக்கும் என்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ''அமிதாப் 'ரானா' படத்தில் நடிக்கவில்லை. தப்புத் தப்பாக எழுதாதீங்க...'' என்று கோபத்தில் பொரிந்தார், கே.எஸ்.ரவிக்குமார். 'ராணா'வின் புரொடக்ஷன் எக்ஸ்யூட்டிவ் முரளி மனோகர். 'ஜீன்ஸ்' படத்தின் தயாரிப்பாளர். அமிதாபச்சன் குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானவர்.
முரளியை பொறுத்தவரை 'ராணா' படத்தில் அமிதாப்பை கெஸ்ட்ரோல் பண்ண வைப்பது ஒன்றும் கம்பசித்திர வேலை இல்லை. சாதாரண சப்பை சமாச்சாரம். திடீரென்று எந்த நேரத்திலும் அமிதாப் நடிக்கலாம் அப்படி நடித்தால் சஸ்பென்ஸாக வைத்திருக்கலாம் என்று நினைத்த சங்கதி இப்படி அப்பட்டமாய் அம்பலத்துக்கு வந்துவிட்டதே என்கிற கோபத்தின் வெளிப்பாடுதான் ரவிக்குமாரின் சீற்றம்.
'ராணா'வின் ஃபர்ஸ்ட் பிரின்ட் தயாரிக்கும் பொறுப்பை முதலில் ரஜினியிடம் கொடுத்த ஈராஸ் நிறுவனம், இப்போது கே.எஸ்.ரவிக்குமார் கைவசம் கொடுத்து இருக்கிறது. ரஜினி சம்பளம் இன்னும் பேசப்படவில்லை.
கொஞ்சமாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த 'எந்திரன்' படம் உலக அளவில் வசூலை வாரிக்குவித்தது. அதனால் ரஜினி 'ரானா' படத்துக்கான சம்பளத்தை முன்கூட்டியே நிர்ணயிக்கவில்லை. 'ரானா' தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான பிறகு மூன்று மொழிகளிலும் குவிக்கும் வசூலில் குறிப்பிட்ட பர்சன்டேஜை சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளார், ரஜினி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று படத்தை முடிக்காமல் 'ரானா' படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்து வருகிறார், டைரக்டர்.
ஒண்ணரை வருட ஃப்ராஜக்ட். முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பிடிப்பு முடியமுடிய அந்தந்த கேரக்டருக்கு தகுந்த நடிகைகளை அவ்வப்போது ஃப்ரீயாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். தேதி தெரியாமல் முன்கூட்டியே நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்து கொண்டு கால்ஷீட் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது, 'ராணா' யூனிட்.
அதுசரி 'ராணா' என்பதின் அர்த்தம் என்ன? ஆன்மிகத்தில் ரஜினி ரொம்பவும் நேசிக்கும் மகான்கள் ராமகிருஷ்ணர் ப்ளஸ் விவேகானந்தர் இருவரையும்தான். விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன். அந்த மகான்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து ( ராமகிருஷ்ணர் , நரேந்திரன் ) 'ராணா' என்று நாமகரணம் சூட்டியுள்ளார், சூப்பர்ஸ்டார்!
ராணா பிட்ஸ்

ரஜினி தனது ராசி கடவுளான ஏவி.எம் ஸ்டுடியோவில் இருக்கும் தனது ராசியான பிள்ளையார் கோயிலில் ஏப்ரல் மாசக் கடைசியில் 'ரானா' படத்துக்கு பூஜை போடுகிறார். முதலில் டூயட் பாடல் காட்சியை படம்பிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்காக முயல்குட்டி தீபிகா படுகோனுடன் அயல்நாடு பறக்கிறார், சூப்பர் ஸ்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளில் தயாராகிறது 'ரானா' என்கிற செய்தி புரூடா! ஈராஸ் நிறுவனம் தயாரிப்பதால் இப்படி ஒரு வெளித்தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. உண்மையில் தமிழில் மட்டுமே நேரடியாக உருவாகிறது 'ரானா'. இதர மொழிகளில் டப்பிங் மட்டுமே செய்யப்படுகிறது.

-எம். குணா
![]() |
| |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
No comments:
Post a Comment