Rajni in Mumbai for one Night

Meena Iyer, TNN, Feb 15, 2011, 12.00am IST

While the biggest Bollywood stars make announcements even about their inconsequential travel plans, Tamil superstar Rajnikant made a quiet entry into Mumbai over the weekend.
His publicist (that’s a joke, legends don’t have PRs) didn’t call the photographers to the airport to click him on his arrival, as apna Bollywood always make sure to do.
Instead, Rajni came with wife, Lata and recently-married daughter Soundarya and checked into a suburban five-star hotel.
He then headed for a Juhu hotspot to celebrate the 25th wedding anniversary of his friends Dr Murli Manohar and his wife Sujata. This couple who has made films like the Aishwarya Rai Bachchan film Jeans, are based in Chennai, but have strong links in Bollywood too.
It is rumoured that Dr Murli Manohar will also have a stake in Rana, the film in which the legend has a triple role.
Our source says, “Rajni sir combined business with pleasure. He finalised the rest of the cast for this K S Ravikumar project that will mount the floors in April 2011. Deepika Padukone has been signed to play the female lead opposite the youngest Rajni. Apparently, this is the only romantic track in Rana.”
Also, sources confirm that the Dabangg villain Sonu Sood will play the baddie. The interesting bit here is that Sonu will have a role that is almost parallel to that of the main Rana.
One leading distributor who was also present at this private party says, “In Robot, we had two Rajnikants. In Rana, there are three of him, hence the excitement is also tripled.”
There is talk that there may be a couple of other Bollywood character actors who may make it to the final cast in some capacity. What Rajni wants, Rajni gets.
http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rajni-in-Mumbai-for-one-night/articleshow/7494694.cms

சூப்பர் ஸ்டாரின் திடீர் மும்பை பயணம் & ராணா சில முக்கிய தகவல்கள்! 

லைவர் எப்போ எங்கே இருப்பார் என்ன பண்ணுவார் என்பது யூகிக்க முடியாத ஒரு விஷயம். இந்த பக்கம் லேனா குடுமபத்து திருமண வரவேற்ப்பில் கலந்துகொள்வார். அந்த பக்கம் திடீரென்று விமானத்தில் பறந்துகொண்டிருப்பார். சரி… தலைவர் வெளியூர் போறார்னு நினைச்சா மறுபடியும் அன்னைக்கு சாயங்கலாம் சென்னைல இருப்பார்.

தலைவர் சமீபத்தில் மும்பை போனது பத்தியும், ராணா பத்தியும் சுவாரஸ்யமான சில விஷயங்களை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இணையத்தில் பார்க்க நேர்ந்தது. (நாளிதழில் காலை வெளிவரும்).
பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் தற்பெருமைக்கும், டம்பத்துக்கும் பெயர் பெற்றவர்கள். பணிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க கூடிய நிலையில் தான் அவர்களில் பெரும்பாலானோர் இருப்பதாக மும்பை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கூட அடிக்கடி அங்கலாய்த்துக்கொள்வது  உண்டு. சிலர் அது குறித்து தகுந்த நேரம் கிடைக்கும்போது மறக்காது கிண்டலடிப்பார்கள்.
இதோ தலைவரோட மும்பை பயணம் பற்றிய செய்தியில் அவர்கள் கூறுவதை படியுங்கள்…. ஆங்கிலத்தில் வெளியானதை தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறேன்.
ஒரு நாள் பயணமாக மும்பையில் ரஜினி!
பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் கூட தங்கள் முக்கியமற்ற சிறு சிறு பயணங்களை பற்ற தம்பம் அடித்துக்கொள்ளும் நிலையில், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வார இறுதியில் மும்பைக்கு அமைதியாக வந்து சென்றார்.
பாலிவுட்டில் சில நட்சத்திரங்கள் செய்வதுபோல அவருடைய பி.ஆர்.ஒ. (சும்மா ஜோக்குக்கு. மிகப் பெரிய மனிதர்கள் பி.ஆர்.ஒ. வைத்துக்கொள்வதில்லை) ஏர்போர்ட்டுக்கு யாரையும் அழைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லவில்லை. ரஜினி மும்பை வருகிறார் வந்துகொண்டிருக்கிறார் என்று ட்வீட் செய்யவில்லை. வெத்து பப்ளிசிட்டி தேடவில்லை. அவர் பாட்டுக்கு அமைதியாக அவரது துணைவி லத்தா மற்றும் சமீபத்தில் திருமணமான அவர் மகள் சௌந்தர்யா ஆகியோருடன் ஆரவாரமின்றி வந்து இறங்கினார். வந்தவர் புறநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.
அங்கிருந்து நேராக ஜோஹுவுக்கு சென்றார். அங்கு அவரது நண்பர் டாக்டர். முரளி மனோகர் மற்றும் அவரது மனைவி சுஜாதாவின் 25  வது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இந்த தமிழர்கள், பாலிவுட்டுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
ராணாவில் டாக்டர் முரளி மனோஹரும் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுவது என்னவென்றால், “ரஜினி சார், தனக்கு மிகவும் பிடித்த வகையில் இந்த படத் தயாரிப்பு அமையுமாறு பார்த்துகொள்கிறார். ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கும் இப்படத்தில் நடிக்க தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் மூன்று வேடங்களில் தோன்றும் ரஜினியில், இளம் ரஜினியை இவர் ரொமான்ஸ் செய்கிறார். சொல்லப்  போனால் படத்தில் உள்ள ஒரே ரொமாண்டிக் டிராக் இவர்களுடையது தான்.
அதுமட்டுமல்ல, படத்தில் வில்லனாக நடிக்க இருப்பவர், சல்மான்கானின் ‘டபாங்’ படத்தில் கலக்கிய சோனு சூத் தான். (இவர் சந்திரமுகியில் கூட நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.) இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சோனுவுக்கு படத்தில் முக்கிய மெயின் பாத்திரமான ராணாவுக்கு நிகரான பாத்திரம்.
அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு முன்னணி விநியோகஸ்தர் கூறியது என்னவென்றால், “ரோபோவில் இரண்டு ரஜினி இருந்தார்கள். ராணாவில் மூன்று ரஜினி. அப்போ நினைத்துபாருங்கள்… ரகளை மூன்று மடங்கு களை கட்டும் அல்லவா?”
சோனு தவிர மேலும் சில பாலிவுட் நடிகர்களும் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடிக்க கூடும் என்று தெரிகிறது.
ரஜினி என்ன நினைக்கிறாரோ அது நிச்சயம் கிடைக்கும்; நடக்கும்! அது!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...