
இரு மாதங்களுக்கு முன் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்க்கப்படாத நிலையில் இந்தப் படத்தைப் பார்த்தார் ரஜினி. அப்போதே இந்தப் படம் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்த ரஜினி, இப்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் இந்தப் படத்தை மீண்டும் பார்த்துள்ளார்.
‘இந்தப் படம் பக்கா கமர்ஷியல், அதே நேரம் சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ளது’, என்று பாராட்டிய ரஜினி, தனுஷின் நடிப்பு தன்னை அசத்திவிட்டதாகக் குறிப்பிட்டார்.
‘மகேந்திரனின் முள்ளும் மலரும் எப்படி எனக்கு புதிய திருப்புமுனையைத் தந்ததோ, அதேபோல தனுஷுக்கு ஆடுகளம் அமையும்’ என்றும் அவர் கூறினார்.
அருமையான ஸ்க்ரிப்ட், தெளிவான டைரக்ஷன் என இயக்குநர் வெற்றி மாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார் ரஜினி.
ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்ட இந்தப்படத்தை ரஜினியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள், தனுஷ் மற்றும் அவரது பெற்றோர், இயக்குநர் செல்வராகவன் ஆகியோரும் பார்த்து ரசித்தனர்.
தனுஷ், டாப்ஸீ நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் ஈழத்துக் கவிஞர் ஜெயபாலன்.
-என்வழி ஸ்பெஷல்
No comments:
Post a Comment