அங்கிங்கெனாதபடி எங்கும் வெற்றிகளை குவித்து, திரையரங்க வரலாற்றில் பல புதிய சரித்திரங்கள் படைத்த எந்திரன் திரைப்படம் சென்னையில் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்ட சில திரையரங்குகளுக்கு ஷீல்டு வழங்க எல்.ஐ.சி.யூனிட் ரசிகர்கள் மற்றும் அதன் தலைவர் பி.ஸ்ரீதர் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரமாண்ட ஷீல்டு டிசைன் செய்யப்பட்டு, ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மேற்படி திரையரங்குகளுக்கு ரசிகர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
எல்.ஐ.சி. யூனிட் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராக்கி திரையரங்கம் சார்பாக அதன் நிர்வாகி பூபாலன் அவர்கள் ஷீல்டு பெற்றுக்கொண்டார். இதையொட்டி சிறப்பு கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். திரையரங்க பொறுப்பாளர் திரு.ஜாம்சனிடம் எந்திரன் வெற்றி ஷீல்டு வழங்கப்பட்டது.
ஷீல்டு வடிவமைக்க தேவையான எந்திரன் புகைப்படங்கள் நமது தளம் சார்பாக முன்னதாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரு நிகழ்சிகளிலும் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பின் பேரில் நமது தளம் சார்பாக நாம் சென்றிருந்தோம்.
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சி.பி.ரமேஷ் குமார், பொன்னேரி ஆர்.சி.சேகர், மாவட்ட துணை செயலாளர் ரஜினி டேவிட், கே.பஞ்சாமணி, வி.ரஜினி சதா, எம்.ஸ்ரீதர், கே.ராஜசேகர், சி.தர்மராஜ், எம்.தனசேகர், மற்றும் அம்பத்தூர் நகர் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
அண்ணாநகர் மு.ரஜினி டில்லி, வில்லிவாக்கம் ஆரூண், பெங்களூர் இளவரசன், வாணியம்பாடி வி.சி.அன்பரசன், சேலம் எஸ்.குமாரவேல், சேலம் ஏ.சங்கர், டி.வி.எஸ்.ரகு, சேட்டு ரமேஷ், எஸ்.சண்முக சுந்தரம், சைதை குமார், அரசு, மணிவண்ணன், போரூர் ஜான் , காண்டீபன், அகஸ்டின், சுல்மான், சதீஸ், ஸ்ரீகாந்த், பாலச்சந்தர், பாலா, மற்றும் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எல்.ஐ.சி. ஸ்ரீதர் செய்திருந்தார்.
—————————————————————-
நம் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த தை திருநாளில், தங்கள் எண்ணங்கள் சிறந்து, வாழ்வும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
- OnlySuperstar.com Team
No comments:
Post a Comment