சூப்பர் ஸ்டார் என்றாலே திரையுலக மற்றும் தயாரிப்பாளர்கள் வட்டத்தில் ‘கற்பக விருட்சம்’ தான். இவர் தான் என் தயாரிப்பாளர் என்று அவர் யாரையாவது கை காட்டினாலே, அடுத்த நிமிடம் அவர் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிடுவார். இண்டஸ்ட்ரியே பரபரப்பாகிவிடும். அந்த பரபரப்பு படத்தின் வெற்றி விழா வரைக்கும் தொடரும்.
இந்நிலையில், ரோபோ மூலம் மீண்டும் தமது அகில இந்திய & சர்வதேச மார்கெட்டை நிரூபித்திருக்கும் சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கப்போகும் படம் என்ன மற்றும் அவரை வைத்து தயாரிக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார், இயக்கப் போகும் பாக்கியசாலி யார் (பின்னே பல மாசம் தலைவரை பக்கத்துலே இருந்து பார்க்கலாமே…!) என்பது பற்றி பல்வேறு யூகங்கள் உலவி வருகின்றன. அந்த அடிப்படையில் சில நிகழ்வுகள், சில யூகங்கள், சில சாத்தியங்கள் & சில விருப்பங்கள் பற்றி பார்ப்போம்.
தலைவர், தமது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, தமது உடனடி பணி, அனிமேஷன் படமான ஹராவை முடிப்பது. கிட்டத்தட்ட 60% வரை முடிவடைந்திருக்கும் அந்த படத்தை முடித்துவிட்டு, ஒரு ஆறு மாதம் ரெஸ்ட். அதற்க்கு பிறகு நல்ல கதை ஏதாவது அமைந்தால் நடிப்பது பற்றி பரிசீலிப்பேன். மற்றபடி எனக்கு வயசாயிடுச்சுங்க. நடிக்கிறதை பத்தி நிறைய யோசிக்கணும்” என்று கூறியிருப்பார். (ஹராவை தொடரப்போகிறவர் ரவிக்குமார் என்று தலைவர் தன் வாயால் இன்னும் சொல்லவில்லை. இருப்பினும் ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது.)
தலைவர் இப்படி கூறினாலும் அவரது அடுத்த படத்தை பற்றி புதுப் புது செய்திகள், மற்றும் வாதங்கள் கிளம்பிக்கொண்டுதானிருக்கின்றன.
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் மேல் உள்ள அந்த சக்தி தன்னை இயக்குவதாக தனது செயல்களை வழிநடத்துவதாக அவர் உறுதியாக நம்புகிறார். எனவே அடுத்த படம் நடிக்கவேண்டும் என்ற ப்ராப்தம் இருந்தால் சூழ்நிலைகள் கனிந்து அது தானாகவே அமையும் என்று கருதுகிறார். (ரோபோவே அப்படித்தாங்க அமைஞ்சது!)
பாலிவுட்டில் 2010 இல் வெளியான ஒன்றிரண்டு ப்ளாக்பஸ்டர்களில் KOLMAAL 3 ம் ஒன்று. இதன் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
ரோபோ வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அகில இந்திய மற்றும் உலக மார்கெட் எங்கேயோ சென்றுவிட்டதால், சூப்பர் ஸ்டாரை தமது அடுத்த படத்தில் நடிக்க வைக்க துடிக்கிறார் ரோஹித் ஷெட்டி. இதற்காக கதை ஒன்றை தயார் செய்து, தலைவரின் ஒப்புதலை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதன் பொருட்டு தலைவரின் நெருங்கிய நண்பர்களிடம் பேசி வருகிறார் ரோஹித் ஷெட்டி. இவரது முயற்சி பலித்தால் நேரடி ஹிந்தி படம் ஒன்றில் அடுத்து நாம் சூப்பர் ஸ்டாரை காணலாம்.
தலைவர் கடைசியாக 2000 வது ஆண்டு ‘புலந்தி’ என்னும் ஹிந்தி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. பரப்பாக தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவ்வப்போது ஹிந்திய்ல் கௌரவ வேடத்திலும், சில சமயம் முழு வேடத்திலும் நடிப்பார். இது அவரைப் பொறுத்தவரை ஒரு பிக்னிக். தலைவர் கடைசியாக நடித்த முழு வேட ஹிந்தி படம் ‘பூல் பனே ஆங்க்ரே’ பாலிவுட்டில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. சென்னையில் நூறு நாள் படம் அது.
நம்மை பொறுத்தவரை தலைவர், ஹரி அல்லது கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் ஒரு நார்மல் பட்ஜெட் படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். (ம.அ. ரிசல்ட்டுக்கு பிறகுமா கே.எஸ்.ரவி என்று கேட்காதீர்கள். நம்மை வைத்து முத்து, படையப்பா என்று இரண்டு சூப்பர் ஹிட்களை கொடுத்தவராச்சே அவர் !)
இல்லையென்றால், முருகதாஸ் டைரக்ஷனில் ஒரு சூப்பர் ஹை-பட்ஜெட் படம். ஏ.ஆர்.ரஹ்மான் – சூப்பர் ஸ்டார் – முருகதாஸ். எப்படி…? சும்மா டக்கரா இருக்குமில்லே…
But எதிர்காலத்தில் என்ன, எப்படி அமையும் என்று யாருக்கு தெரியும்?
ஒரு வேளை, மீண்டும் ஷங்கருக்கே வாய்ப்பு கிட்டலாம். மேற்படி இயக்குனர்களில் யாருக்கு வாய்ப்பு கிட்டினாலும், தயாரிக்கப்போவது யார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அநேகமாக சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ், சத்யா மூவீஸ், பஞ்சு அருணாசலம் ஆகிய மூவரில் ஒருவருக்கு ஜாக்பாட் அடிக்ககூடும் என்பது நம் கணிப்பு. பார்க்கலாம்!
இதற்கிடையே, கன்னட படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் ரஜினியாகவே தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். கன்னடத்தில் முன்னணி நடிகர். இவரது 100 வது படம் ‘ஜோகையா’. இதை இயக்குவர்து பிரபல இயக்குனர் ப்ரேம். இவர் பிரபல நடிகை ரக்ஷிதாவின் கணவர்.
(தலைவர் சும்மா சிங்கம் மாதிரி ராஜ்குமார் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறதை பாருங்க. பெங்களூரில் நடைபெற்ற கன்னடப் படம் ஒன்றின் சிறப்பு காட்சியின் போது எடுத்த படம் இது. இந்த மாதிரி ராஜ்குமார் பக்கத்துல உட்கார்ற CAPACITY அங்கே யாருக்காவது இருக்கா? இல்ல உட்காரத் தான் முடியுமா?!)
ஜோகையா படம் சிவராஜ்குமாரின் 100 வது படம் என்பதால் அதை மிகவும் விசேஷமாக கருதுகின்றனர் ராஜ்குமார் குடும்பத்தினர். இதையடுத்து, சூப்பர் ஸ்டார் தோன்றி சிவராஜ்குமார் பற்றி ஒரு முன்னுரை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கருதிய ராஜ்குமார் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டாரை தொடர்புகொள்ள, உடனே ஒப்புக்கொண்ட சூப்பர் ஸ்டார், எப்போ ஷூட்டிங் என்று கேட்க, இந்த வாரம் பெங்களூரில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜனவரி 15 பொங்கலன்று இப்படம் ரிலீசாகும் என்று தெரிகிறது.
30 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக கன்னட திரையில் தலைவர் தோன்றுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தமிழில் 1981 இல் வெளியான ‘கர்ஜனை’ படம் கன்னடத்திலும் கர்ஜனே என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியானது. அது தான் தலைவர் கடைசியாக நடித்த நேரடி கன்னடப் படம்.
[END]
No comments:
Post a Comment