எந்திரன் பெற்றுள்ள மந்திர வெற்றி குறித்து, இங்குள்ள பல பத்திரிக்கைகளை விட, மற்ற மாநிலங்களில் வெளியாகும் பல பத்திரிக்கைகளில் செய்திகள் நிறைய வெளியாகியிருக்கின்றன.
சன்னுக்கும் இங்குள்ள மற்ற பத்திரிக்கைகளுக்கும் இடையே உள்ள தொழில் ரீதியிலான போட்டியில், எந்திரன் பெற்ற பிரம்மாண்ட வெற்றி குறித்த செய்திகள், பெரிதளவில் மறைக்கப்பட்டன என்பதே நிஜம். அதையும் மீறி ‘ர…ஜி…னி’ என்ற ஒரே மந்திரச் சொல்லால் எந்திரன் குறித்த வெற்றிச் செய்திகள் நம் காதில் விழுகின்றன.
உதாரணத்திற்க்கு சென்ற வாரம் குஜராத்திலிருந்து வெளியாகும் ‘குஜராத் சமாச்சார்’ என்னும் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியை படியுங்கள்.
2010 ஆம் ஆண்டு வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் குறித்த முழு பக்கா செய்தி ஒன்றில், எந்திரன் குறித்து மேற்படி நாளிதழ் தெரிவித்துள்ள செய்தியை படியுங்கள். பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை ஓரிரு வரிகளில் தாங்கி வந்திருக்கும் இந்த செய்தி எந்திரன் வெற்றி குறித்த திருக்குறள் என்றே கூறலாம்.
குஜராத் சமாச்சார் 24/12/2010
//சிட்டி என்ற ரோபாவாய் தனி ஆளாய் பாலிவுட்டில் மீண்டும் நுழைந்து அனைத்து கான்களையும் ஓரங்கட்டிவிட்டு , அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் முறியடித்துள்ளார் ரஜினி.//
(Inforamtion courtesy: Jegan)
[END]
No comments:
Post a Comment