ரசிகர் சந்திப்பில் தலைவர் கூறியது போல, இந்திய திரைப்பட வரலாற்றில் எந்திரன் ஒரு மிகப் பெறும் சரித்திரத்தை படைத்துவிட்டது. இந்திய சினிமா என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்றிருந்த நிலையை மாற்றி, அதற்கப்பாலும் வேறு திரையுலகங்கள் இருக்கின்றன என்று சர்வதேச சமுதாயத்திற்கு உணர்த்தியது நம் எந்திரன்.
ஒரு தமிழ் திரைப்படத்திற்கு ரூ.150 கோடிகளுக்கு மேல் முதலீடு என்பதே மிகப்பெரும் சாதனை!
அது அதற்க்கு மேல் விலை வைத்து விற்கப்பட்டது அதை விட பெரிய சாதனை!!
அப்படி வெளியிட்டவர்கள் நல்ல லாபம் சம்பாதித்தது அதை விட பெரிய சாதனை!!!
இப்போது எந்திரன் படைத்திருக்கும் மற்றொரு சாதனையை பார்ப்போம்.
ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவிற்கு கதையமைப்புக்களும், காட்சியமைப்புக்களும் கொண்ட பல திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால், பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து, பிரபல டைரக்டர்கள் இயக்கம், பிரபல நட்சத்திரங்களின் படங்களுக்கு கிடைககும் விளம்பர வெளிச்சம் மற்றும் EXPOSURE, மற்ற படங்களுக்கு கிடைப்பதில்லை. இதன் மூலம், அனைவரும் கலந்துகொள்ளவேண்டிய ஓட்டப்பந்தயத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்துகொண்டு வெற்றி மாலை சூடுவது வாடிக்கையாகிவிட்டது. உலகமும், அடாடா அதை தான் வெற்றி என்று நம்புகிறது.
இந்த குறையை போக்க, துவக்கப்பட்டது தான் மேற்படி TWITCHFILM.COM வெப்சைட். உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் தரமான, தொழில்நுட்பத்தில் உயர்ந்த திரைப்படங்களை அடையாளம் கண்டு அவற்றை பிரபலப்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கம். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை தினசரி கொண்ட இந்த தளத்தை சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், வெளியீட்டாளர்கள், திரை ஆர்வலர்கள் என பலருக்கு உபயோகமாக இருக்கிறது.
2010 ஆம் ஆண்டு வெளியான பல்வேறு சர்வதேச திரைப்படங்களை பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த தளம். கட்டுரையாளர் J Hurtado தாம் மெய்மறந்து ரசித்த, சிலாகித்த, டாப் 10 படங்களை பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கட்டுரையாளரின் எந்திரன் விமர்சனத்தை (அனுபவத்தை) கீழே கடைசியில் தரப்பட்டுள்ள லின்க்கில் காணவும்.
அதை கட்டாயம் ஒரு முறை படித்து பார்க்கவும். ஒரு விமர்சனம், FILM REVIEW என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று கட்டுரையாளர் இங்குள்ள பல ஜென்மங்களுக்கு பாடமே நடத்தியிருக்கிறார்.
தீவிர ரஜினி ரசிகர்கள் நிரம்பிய ஒரு திரையரங்கில் அவரது ரஜினி பட FDFS அனுபவம் (First Day First Show) ஒரு கணம் நிச்சயம் உங்களை சிலிர்க்கவைக்கும்.
எந்திரன் – திரைப்படம் அல்ல; திரை திருவிழா!
எந்திரன் : Rank (1)
//எந்திரன் சுருக்கமாக சொன்னால் இது திரைப்படம் அல்ல. திரை திருவிழா. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய திரைப்படம். இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்பும், பின்பும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த வரவேற்ப்பும், அவர் ஏற்படுத்திய அலையையும் இதுவரை நான் என் வாழ்நாளில் எந்த திரைப்படத்திற்கும் கண்டதில்லை. இந்தியாவிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் என்னக்கு ஒரு கணம் தலைசுற்ற வைத்தன. ஒரு வாரத்திற்கு அனைத்து காட்சிகளும் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ஃபுல்லாகிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ரசிகர்கள் இந்த பட வெற்றிக்காக கோவில்களுக்கு சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். புனித தளங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
துபாயில் விடியற்காலை 5.30 க்கேல்லாம் முதல் காட்சி துவங்கியது. ரசிகர்களும் பொதுமக்களும் திரையரங்கை விட்டு வெளியே வராமல், ஒரே நாளில் திரும்ப திரும்ப பல முறை படத்தை பார்த்தனர். ரஜினியின் மிகப் பெரிய படமான எந்திரனை விடுங்கள். அவரது ஒரு சாதாரண புதிய ரிலீஸ் படம் ஏற்படுத்தும் இந்த CRAZE மற்றும் ADULATION ஆகியவற்றை நம்மில் பலர் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அவ்வளவு ஏன், எங்கோ மூலையில் இருக்கும் என் நகரமான DALLAS இல், ரஜினியின் தீவிர பக்தர்களுக்கிடையே நானும் என் மனைவியும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்தோம் என்று சொல்வதை விட பிரமித்தோம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். (எங்கள் இருவரில் யாருமே இந்தியர்கள் அல்ல!). அந்தளவு ரசிகர்களில் ஆரவாரம், மற்றும் உற்சாக கூக்குரல்கள். அந்த ஷோவில், நாங்கள் இருவர் மட்டுமே இந்தியர் அல்லாதவர்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, படத்தின் ஒரு வார டிக்கட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்திருந்தது. தியேட்டருக்கு வெளியே அடுத்த காட்சியை காண மக்கள் க்யூவில் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இதை நீங்கள் தவறவிட்டீர்களானால், அந்த ஆண்டின் திரைத் திருவிழாவை தவறவிட்டீர்களாவீர். அந்தளவு கண்கொள்ளா காட்சியது. ரஜினியின் பெயர் திரையில் வரும்போது, தியேட்டரே ஒரு கணம் ஆரவாரத்தால் அதிர்ந்தது. பேப்பர் துகள்கள், மேலிருந்து அள்ளி இறைக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் ஒரே விசில் சத்தம்… “ஹூய்…” “ஹேய்….” “தலைவா…” போன்ற குரல்களால் என் காது சவ்வு கிழிந்தது. இந்த ஆரவாரத்தால் டைட்டில் மற்றும் பெயர்கள் போடும் போது போடப்படும் பின்னணி இசை சுத்தமாக எதுவுமே கேட்கவில்லை. அதற்க்கு பிறகு படம் துவங்கியது. மேற்படி அமர்க்களங்கள் அதிகமானதே தவிர சற்றும் குறையவில்லை.
இந்த பட விமர்சனத்திலேயே நான் குறிப்பிட்டேன், இந்த படத்தை நான் என் வீட்டில் HOME VIDEO வில் (இன்னும் வெளியாகவில்லை. வெளிவந்தால் சொல்கிறேன்) நான் பார்க்கும்போதும் கூட இந்த அனுபவத்திற்கு சற்றும் குறைவிருக்காது என்றே எண்ணுகிறேன். ஏற்கனவே, நான் பேப்பர் துகள்களை சேகரித்து வைத்திருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியை வரவேற்க.//
J Hurtado’s Top 10 Movie Memories of 2010
I have a confession to make: I didn’t see anywhere near the number of movies that my colleagues here did in 2010, so my list is going to be a little bit different. I’m not so much making a “Best of” list for 2010, mine is more a list of most memorable movie experiences from the last year. Almost all of them came in cinema halls, but one or two of them came at home with new films from this year. You’ll see a few familiar names, but then you’ll see some things that I bet won’t be found on the other guys’ lists. But, hey! Isn’t that what these lists are for, finding the things you missed?
The films on this list made me laugh, chant, and knotted my stomach; sometimes they made me rethink what films should be like, they challenged my preconceptions about people and places; some of them made me question my own sanity, and some were just plain fun in a way that was fresh and new. There are probably at least a couple that you haven’t seen, well, here’s your chance to seek them out, in no particular order apart from number one:
1. Enthiran (Dir: Shankar)
Enthiran was an event film of the highest magnitude. The highest budgeted film ever made in India. Superstar Rajinikanth inspires such devotion that nothing I’ve seen in my life compares to the mania that preceded and followed this films release. The news from India was madness, 24 hour showings were booked solid for weeks in advance, men made pilgrimages to bless holy relics in hopes of the film’s success, showings began at 5:30 AM in Dubai, people sat in auditoriums all day to watch the film numerous times. Most of us cannot even imagine the kind of insanity a new Rajinikanth film inspires, let alone his biggest film ever. Even in my little corner of the world in Dallas, I saw the film with my wife (neither of us are Indian) in an auditorium absolutely packed with screaming devotees. We were the only non-Indians in the room, this showing had been sold out for a week, and there was a line out the front door of the theater for ticket holders. All I can say is that if you missed this, you missed the film event of the year. When Superstar Rajni’s credit comes up (before the production company or any other credits) the house exploded, confetti rained down from the upper rows of the theater, and whistles, cat calls, and shouts of “Thalaivar!” (Rajni’s nickname to fans) drowned out the sound track completely through the opening credits and music. Then the film started, and it only got better. In my review I made note of the fact that I have no illusions about the experience diminishing once I get a chance to watch this on home video (not available yet, trust me I’ll let you know), however, I have confetti at the ready to try and recapture my top movie experience of 2010 at home!
—————————————————————–
For full article, pls refer:
http://twitchfilm.com/news/2010/12/josh-top-10-2010.php
For author’s Enthiran review (experience) :
http://twitchfilm.com/reviews/2010/10/enthiran-robot-mega-review.php
(DON’T MISS THIS!)
To know about twitchfilm.com, pls refer:
http://twitchfilm.com/about.php
—————————————————————–
[END]
No comments:
Post a Comment