
Forbes India listed Rajinikanth, the superstar of India, as Indian of the year 2010 in its annual edition released recently.
Tamil summary
பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.
இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment