திருமதி. லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா கடந்த 6 ஆம் தேதி மாலை, காமராஜர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இவ்விழா நடைபெறுவது வாடிக்கை. நமது தளமும் தவறாது கவர் செய்து வந்திருக்கிறது.
இதோ இந்த ஆண்டு நமது எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ் – ஆன்லைன் மீடியாவில் முதல் முறையாக – பிரத்யேக புகைப்படங்களுடன்!
சினிமா, இசை, பொது வாழ்க்கை, ஆசிரயர் பணி உள்ளிட்ட பல் துறை பிரமுகர்கள் இவ்விழாவில் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
சங்கராபரணம் – கே.விஸ்வநாத், கிரிக்கட் வீரர் வெங்கட்ராகவன், எந்திரன் படக்குழுவை சேர்ந்த இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் சக்சேனா, படத்திற்கு கிராபிக்ஸ் பணியை செய்த ஸ்ரீனிவாஸ் மோகன், சமஸ்க்ரித பண்டிதர் சிவராமன், வியட்நாம் வீடு சுந்தரம், சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் , பழம்பெரும் நடிகை ராஜ சுலோச்சனா (எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் இவர்!) உள்ளிட்டோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிரபல மூத்த ஹிந்தி நடிகர் தர்மேந்திரா – ஹேமாமாலினி தம்பதியினருக்கு Rajini Legend Award வழங்கட்டது.
விழாவின் ஹைலைட் என்னவென்றால், தர்மேந்திரா மற்றும் சூப்பர் ஸ்டார் இருவரின் பிறந்த நாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது தான். தர்மேந்திராவின் பிறந்த நாள் டிசம்பர் 8. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள்; டிசம்பர் 12. இருவரின் பிறந்த நாளையும் மேடைக்கு ஒரு பெரிய கேக்கை வரவழைத்து வெட்டி கொண்டாடினர்.
பார்வையாளர்கள் கைதட்டல் மழையில் தர்மேந்த்ரா, மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி பின்னர் தத்தம் குடும்பத்தினருக்கு ஊட்டிவிட்டனர்.
சலங்கை ஒளி விஸ்வநாத் பேசுகையில், “நான் டைரக்ஷனை விட்டு, ரொம்ப நாள் ஆகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இதுவரை நான் இயக்காதது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது. ரஜினி மட்டும் நடிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொனால் போது, அவரை வைத்து டைரக்ஷன் செய்ய நான் காத்திருக்கிறேன்” என்றார்.
சமஸ்க்ரிதபண்டிதர் சிவராமன் பேசுகையில், “யோகா செய்யுங்கள், தியானம் செய்யுங்கள், விபூதி பூசிக்கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னால் இன்றைய இளைய தலைமுறையினர் லட்சியம் செய்வதில்லை. ஆனால், அதையே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு படத்தில் செய்தால் கூட இளைஞர்கள் அப்படியே அதை பின்பற்றுகிறார்கள். இன்றைக்கு அவர பின்பற்றி எத்துனையோ பேர் ருத்ராக்ஷம் அணிகிறார்கள், விபூதி இட்டுக் கொள்கிறார்கள்.” என்றார்.
விழாவில் தர்மேந்திரா – ஹேமாமாலினி ஆகியோரின் படப் பாடல்களுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
சூப்பர் ஸ்டார் ரஜினி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசுகையில், தர்மேந்திராவுடன் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவது ஒரு PLEASANT SURPRISE என்றார்.
எந்திரனின் மாபெரும் வெற்றிக்கு பிறகு உங்கள் பிறந்தநாளை இங்கு ரசிகர்களுடன் கொண்டாடும் எண்ணமிருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இல்லை. நான் எப்போதும் என்னுடைய பிறந்த நாளை இங்கு கொண்டாடுவதில்லை. இந்த வருடமும் நான் பிறந்த நாளுக்கு சென்னையில் இருக்கமாட்டேன்” என்று கூறினார்.
தர்மேந்திரா பேசுகையில், ரஜினி எனக்கு சகோதரர் போல. இவ்விருதை அவர் கையால் பெறுவதை சிறப்பாக கருதுகிறேன் என்றார்.
நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், வந்திருந்தனர். பெங்களூரில் இருந்து சூப்பர் ஸ்டாரின் அண்ணா திரு.சத்தியநாராயண ராவ் தமது மனைவியுடன் வந்திருந்தார். ஆஷ்ரம் பள்ளி மாணவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் திரளாக வந்திருந்தனர்.
[END]
No comments:
Post a Comment