சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா தம்பிதியினருக்கு வருகிற வெள்ளிக்கிழமை – டிசம்பர் 10 ஆம் தேதி சஷ்டியப்தபூர்த்தி அதாவது அறுபதாம் கல்யாணம் நடக்கவுள்ளது.
எப்போதும் இல்லாத அளவிற்கு தலைவருக்கு இந்த ஆண்டு மிகவும் விசேஷமாகும். எந்திரனின் பிரமாண்ட வெற்றி, மகள் சௌந்தர்யா திருமணம், இரண்டாம் பேரன் லிங்கா பிறந்தது, சஷ்டியப்தபூர்த்தி என அனைத்தும் ஒன்று கூடி வந்துள்ளது.
60 வயதை வெற்றிகரமாக கடந்த தம்பதிகளுக்கு அறுபதாம் கல்யாணம் நடத்திவைப்பது இந்திய பாரம்பர்யங்களில் குறிப்பாக தமிழக பாரம்பரியங்களில் முக்கிய ஒன்றாகும்.
திருமணம் என்பது பொதுவாக பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்து வைப்பது. ஆனால் அறுபதாம் கல்யாணம் என்பது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோர் இணைந்து தங்கள் பெற்றோர்களுக்கு, நடத்தி வைப்பது. அதுவும் பேரன் பேத்திகளை பெற்ற பிறகு செய்வது இன்னும் விஷேஷம்.
அறுபது வயது நிறைவடைந்து பிறகு செய்வது – சஷ்டியப்தபூர்த்தி
எழுபது வயது நிறைவடைந்து பிறகு செய்வது- பீமரத சாந்தி
எண்பது வயது நிறைவடைந்து பிறகு செய்வது- சதாபிஷேகம்
அதற்க்கு பிறகு 101 இல் – கனகாபிஷேகம்.
பொதுவாக இது போன்ற திருமணங்கள் செய்வதன் முக்கிய நோக்கம் தம்பதியினரின் ஆயுள் விருத்தி தான். “நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு துணையாக உங்களை பார்த்துக்கொள்ள” என்று சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கு மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோர் கூடிநின்று கொடுக்கும் ஒரு வகை உற்சாகம் இது. சமுதாயத்தில் மிகப் பெரிய கௌரவம் இது.
சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் மிகப் பெரும் பாக்கியங்களாகும். இவற்றை செய்துகொள்ளும் பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
தலைவர் ரஜினி மற்றும் துணைவியார் லதா இருவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து கனகாபிஷேகம் காண வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
இன்றைய தினத் தந்தியில் இது குறித்து செய்தி இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி முற்றிலும் உண்மை. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துவருகிறது.
[END]
No comments:
Post a Comment