பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகியின் இரண்டாம் பாகம் நாகவள்ளியை பார்த்து ரசித்துப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
விஷ்ணுவர்தன் நடிப்பில் உருவான கன்னட ஆப்தமித்ரா தமிழில் ரஜினி நடிக்க சந்திரமுகியாகி சரித்திரம் படைத்தது. ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகம் ஆப்தரக்ஷகாவாக கன்னடத்தில் வெளியானது. இதன் தெலுங்குப் பதிப்பு நாகவள்ளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியின் சிஷ்யராக வருகிறார் ஹீரோ வெங்கடேஷ். ஒரு காட்சியில் ரஜினியும் வருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினிக்கு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் பி வாசு. தனது குடும்பத்தினருடன் வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தார் ரஜினி. படம் முடிந்ததும், பி வாசு அருமையாக திரைக்கதை அமைத்திருப்பதாகப் பாராட்டினார்.
இந்தப் படத்தை ரஜினியை வைத்து இயக்கத்தான் வாசு முதலில் திட்டமிட்டார். ஆனால் அவர் நடிப்பது சாத்தியமில்லாத சூழல் இருந்தது. எனவே தெலுங்கில் வெங்கடேஷை வைத்து எடுக்குமாறு அறிவுறுத்தினார் ரஜினி. அதன்படி உருவானதுதான் நாகவள்ளி.
இப்போது இதன் தமிழ்ப் பதிப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் வாசு. படத்துக்குப் பெயர் வேட்டையன். சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்க, அஜீத் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
English summary
Director P Vasu arranged a special screening of his Telugu film Nagavalli for superstar Rajinikanth and family on Thursday evening at Four Frames Theater. The film is the Telugu version of Aptha Mithra, the sequel to Aptha Rakshaka which was remade as Chandramukhi in Tamil. Originally P Vasu wanted to cast Rajinikanth in the sequel to Chandramukhi but the project did not take off. In Nagavalli Venkatesh plays a student of Rajinikanth. Meanwhile P Vasu wants to remake the film in Tamil as Vettayan with Ajith. It is said that Rajini will appear in a guest role in this film.
No comments:
Post a Comment