தலைவரின் ‘பன்ச்’ பாடமாக மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அநேக சாதனைகளை சூப்பர் ஸ்டார் படைத்திருக

திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அநேக சாதனைகளை சூப்பர் ஸ்டார் படைத்திருக்கிறார். அவரது பெயரை உத்வேகமாக எடுத்துக்கொண்டே அநேகம் வாழக்கையில் முன்னேறியிருக்கிறார்கள். முன்னேறி வருகிரார்கள்.

(Please wait till the browser loads completely to display the pictures attached in this post)

Kungumam Panch Thanthiram1 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

திரையில் அவர் கூறிய பன்ச் டயலாக்குகளில் பொதிந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்களை, தொகுத்து அண்மையில் ‘பன்ச்’தந்திரம் என்ற நூலாக வெளியிடப்பட்டது. நமது தளத்தில் கூட அது பற்றிய செய்தி வெளியானது.

Kungumam Panch Thanthiram2 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

அந்த நூல் உருவானது எப்படி? சூப்பர் ஸ்டார் அந்த நூல் பற்றி அறியவந்தபோது கூறியது என்ன? நூலாசிரியர்கள் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் குங்குமம் வார இதழ் சுவையாக தந்திருக்கிறது.

Kungumam Panch Thanthiram3 640x425  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக  மாறியது எப்படி? சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

தான் பேசிய பஞ்ச்களில் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்த பன்ச் எது தெரியுமா?

“கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது; அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது!”

No Pains No gains  தலைவரின் ‘பன்ச்’ பாடமாக மாறியது எப்படி?  சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?

தலைவர் வீட்டு வரவேற்பறையில்..!

இதை தான் தனது வீட்டிலேயே அவர் சுவரில் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கிறார்.

ஒவ்வொரு ரசிகனும் மனதில் இருத்தவேண்டிய பொன்மொழி இது.

இதை தான் தலைவர் ஒரு பேட்டியில், “இந்த உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. அதை நாம கொடுத்தே தீரனும். எதுவுமே ஃப்ரீ கிடையாது கண்ணா” என்று கூறியிருப்பார்.

அதாவது நமது புகழுக்கும் பெயருக்கும் நாம் விலை கொடுத்தே தீரவேண்டும். (தலைவர் விலையாக கொடுத்தது தனது ப்ரைவசியை.) இதை தான் குருநாதர் கே.பி.யுடனான நேர்காணலிலேயே கூறியிருப்பார்.

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...