30 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடப் படம் ஒன்றில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. நடிக்கிறார் என்பதை விட, சில நிமிடங்கள் நட்புக்காக தோன்றுகிறார் என்பதே சரியாக இருக்கும்.
அந்தப் படத்தின் பெயர் ஜோகய்யா. கன்னட திரையுலகின் ஜாம்பவனான மறைந்த ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார் நடிக்கும் 100 வது படம் இது.
சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் துவக்க விழா பெங்களூரில் நடந்தபோது, இந்தியத் திரையுலக விவிஐபிக்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
இப்போது, இந்தப் படத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரு காட்சியிலாவது ரஜினி நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சிவராஜ்குமார். ராஜ்குமார் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக மிகுந்த நெருக்கமாக இருப்பவர் ரஜினி. எனவே சிவராஜ்குமாரின் இந்த கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புக் கொண்ட ரஜினி, "எப்போது தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்கள், உடனே தருகிறேன்" என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில், ராஜ்குமார் பற்றியும், சிவராஜ் குமாரின் 100வது படம் குறித்தும் அறிமுகம் தருவதாக காட்சிகளை எடுக்கவிருக்கிறார்கள். அதிகபட்சம் 5 அல்லது 6 நிமிடங்கள் இந்தக் காட்சி ஓடக்கூடும்.
ரஜினி கடைசியாக நடத்த கன்னடப் படம் கர்ஜனே. இது தமிழில் கர்ஜனை என வெளியாகி 100 நாட்கள் ஓடியது.
No comments:
Post a Comment