கேரளா, ஆந்திரா என எந்திரன் ஓடிக்கொண்டிருக்கும் அந்தந்த மாநிலங்களில் – சென்டர்களின் விவரத்தோடு – விளம்பரம் வெளியிடப்படும் சூழ்நிலையில், தமிழகத்தில் அது போன்று விளம்பரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆகவே நம் ரசிகர்கள் நிறைய பேர் நம்மிடம் எந்திரன் தற்போது தமிழகத்தில் மட்டும் எத்துனை தியேட்டர்களில் வெளியாகிறது என கேட்கின்றனர்.
இதோ முழு விபரம் :
படத்தின் 49 வது நாளன்று – (19/11/2010 வியாழனன்று நிலவரப்படி)… எந்திரன் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை சுமார் 150.
அதற்கு அடுத்த நாள் புதிய படங்களுக்கு வழிவிட்டதன் பொருட்டு, நாம் இழந்த ஸ்க்ரீன்கள் மொத்தம் 64. So, அடுத்த நாள் வெள்ளியன்று (20/11/2010) எந்திரன் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்கள் எத்துனை தெரியுமா? 86!
தற்போது 55 வது நாள் (25/11/2010) நிலவரப்படி : (தமிழ் நாட்டில் மட்டும்)
City & Chengalpattu – 15
North Arcot – 4
South Arcot – 8
Salem – 13
Trichy – 14
Nellai – 6
Madurai – 8
Coimbatore – 7
——————————-
Total – 75 screens
——————————-
பிற மாநிலங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
ஒவ்வொரு வெள்ளியும் புதுப் பது படங்கள் ரிலீஸ் ஆவதையொட்டி எந்திரன் அவைகளுக்கு வழி விட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Shifting மூலம் ஓடிக்கொண்டிருக்கும் – அதாவது (2nd ரிலீஸ்) திரையரங்குகள் மேலே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
(மேலே காணப்படும் பேனரை நிறுவியவர் என் நண்பர் கோவை பூபால். எந்திரன் பார்க்கச் சென்ற போது இந்த புகைப்படத்தை நமக்கு எடுத்து அனுப்பியவர் நமது வாசகர் Mrs.கிருஷ்ணன்!)
கோவை சாந்தி திரையரங்க மேலாளர் திரு.ராமசாமி கூறுகையில் (எந்திரன் இங்கு தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது) :
“விடுமுறை நாள் வந்துவிட்டாலே, வாண்டூஸ்கள் தங்கள் பெற்றோர்களை இங்கு இழுத்து வந்துவிடுகிறார்கள். சிவாஜியை விட எந்திரன் எங்களுக்கு அதிக வருவாயை தந்துள்ளது. சிட்டியை பொறுத்தவரை எந்திரனுக்கு UNIFORM ரிசல்ட் தான்.”
“எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே ஸ்டேஷனில் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதால், ‘B’ & ‘C’ சென்டர்களை பொறுத்தவரை அந்தந்த ஸ்டேஷனுக்கு தகுந்தபடி சற்று வேறுபாடு இருக்கும். காரணம், ஆடியன்ஸ் டிவைட் (SPLIT) ஆகிவிட்டார்கள்.”
“இங்கு Kovai சிட்டியிலேயே 12 தியேட்டர்கள். அப்படியிருந்தும் இரண்டு வாரத்துக்கு முன்பு, ஞாயிற்று கிழமை அன்று எந்திரன் வசூலித்த தொகை ரூ.1,08,000/-.”
இத்துனை நாள் இத்துனை தியேட்டர்கள் ஓடி, இந்த கலெக்ஷன் வந்தது மிகப் பெரிய விஷயம்.”
- என்று கூறி முடித்துக்கொண்டார் திரு.ராமசாமி.
(குறிப்பு : சிவாஜிக்கு பிறகு அதிக தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து ஓடும் ஒரே படம் எந்திரன் தான்.)
[END]
No comments:
Post a Comment