சில நாட்களுக்கும் முன் ஒரு ஆங்கில வலைத்தளத்தில் யாரோ ஒரு அதிகம் அறியப்படாத (தீபாவளியோ... பொங்கலோ.. தொறக்கியாவோ.. என்னவோ பேர் சொன்னாங்கப்பா!) ஒருவரால் நமது தலைவரின் ரசிகர் என்ற போர்வையில் "டாப் 10 ரஜினிகாந்த் ஜோக்ஸ்" என்ற பெயரில் சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் விதமாக ஒரு கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது.
இதை நீக்கவும் அந்த தளத்தை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல ரசிகர்கள் நமக்கு பின்னூட்டம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நாம் சொல்வது... அமைதி! அமைதி!. நம்முடைய சூப்பர் ஸ்டாரை அவமதிக்க பலர் முயற்சி செய்வது நேற்று இன்றா நடைபெறுகிறது? என்றைக்காவது அவரை அவமதிக்க நினைத்தவர்கள் எண்ணம் ஈடேறியிருக்கிறதா? அவர்கள் மூக்குடைபட்டு போவது தானே நடைபெறுகிறது?
தலைவரை இழிவு செய்யும் இந்த கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்கள் ஒரு பெரிய காமெடி.. அதுல தலைவருக்கு நடிக்க தெரியாது.. அப்படி.. இப்படின்னு.. ஒரே தமாசு தான் போங்க.. இவங்க எல்லாம் தலைவரோடா 1975, 1980களில் வந்த திரைப்படங்களை பார்த்திருக்க மாட்டாங்க.. ஒரு நல்ல நடிகர், ஸ்டைல், மசாலா என்று அவதாரம் எடுத்ததே ரசிகர்களாகிய நம்முடைய மகிழ்ச்சிக்காகத் தானே? இவர்களுக்கெல்லாம் அது எங்கே தெரியப் போகிறது...
இன்னோரு காமெடி என்னான்னா தலைவர் தமிழ் திரைப்பட நடிகர் என்பதால், தமிழையும் தமிழ் மக்களையும் இழிவு செய்யும் வகையில் பின்னூட்டங்களை அந்தக் கட்டுரையில் சில பேர் போட்டிருக்காங்க. நான் கேக்குறேன்.. இதுக்க்க்கு மட்டும் தான் தலைவர் தமிழரா? வேறேதாவதுன்னா கன்னடர், மராட்டியா? போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்.
இதையெல்லாம் அனுமதிக்கும் அந்த தளத்தின் நோக்கம் என்ன? சீப் பப்ளிசிட்டி தானே.. இது தான் காலம் காலமா நடக்குதே.. பெயர் தெரியாதவனெல்லாம் ஃபேமஸாகனும்னா தலைவரை திட்றது தானே குறுக்கு வழி?
என்ன செய்ய... பழுத்த மரம் தானே கல்லடிபடும்.... அப்படியாவது அந்த கட்டுரையாளரின் அல்ப சந்தோசம் நிறைவேறினால் சரி தான். அப்படியாவது அந்த தளத்தை நிறைய பேர் பார்வையிட்டுவிட்டு போகட்டும். நம் தலைவரை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.. வழக்கம் போல இந்த முறையும் இவர்களை போன்றவர்களை அவர் மன்னித்து விடுவார். அது தான் அவரின் உயர்ந்த உள்ளம்.
மலையை பார்த்து எதுவோ என்னவோ செய்தால் அது மலைக்கு இழிவு இல்லை.. நம் அண்ணாமலைக்கு இழிவு இல்லை...
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் சூரியன் மறைவதில்லை.. ஒரே சூரியன். ஒரே சந்திரன். ஒரே சூப்பர் ஸ்டார்.
அந்த தளத்தின் பெயரையும் கட்டுரைக்கான வலை முகவரியையும் வெளியிட்டால், அது கூட அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாகிவிடும். தலைவரின் ரசிகர்களாகிய நாம், இவர்களை போன்றவர்களை முற்றிலும் புறக்கணிப்பது தான் நாம் அவர்களுக்கு தரும் சரியான பாடமாக இருக்கும்.
- கோபி
No comments:
Post a Comment