ஆந்திர பாக்ஸ் ஆபீசில் எந்திரனின் மந்திர சாதனை பற்றிய புள்ளி விபரங்களை முந்தைய பதிவில் பார்த்தோம். தற்போது எந்திரனின் வெற்றி குறித்த தொலைகாட்சி செய்தி ஒன்றையும் திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுவதையும் பார்ப்போம்.
தெலுங்கிலும் கலக்கும் ரோபோ – TV 9 சிறப்பு செய்தி
செய்தியின் தமிழாக்கம் :
//”தென்னிந்தியாவில் ரஜினியை மிஞ்சிய நடிகர் யாரும் இல்லை. (கவனிக்க.. தென்னிந்தியாவில்!). அது ரோபோவால் மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்த தேசத்திலேயே மிகப் பெரிய ஹீரோவாக ரஜினி உருவெடுத்துவிட்டார். அவரது லேட்டஸ்ட் படமான ரோபோ, தெலுங்கு திரையுலகை கலக்கு கலக்கென்று கலக்கி வருகிறது.
பல முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் இதனால் கலங்கிப் போயிருக்கின்றனர். ஒரு டபிங் படம், பல ஏரியாக்களில் முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை ஓரங்கட்டியிருக்கிரதேன்றால் அது சாதாரண விஷயம் இல்லை.
ஆரம்ப காலம் முதலே ரஜினியின் படங்கள் தெலுங்கில் சக்கை போடு போட்டுவருகின்றன. பாட்ஷா காலத்தில் இது வலுப்பெற்று, சந்திரமுகி காலத்தில் இது உச்சத்தை அடைந்தது. சிவாஜியில் அது நீடித்தது. ரோபோவில் அது எங்கோ சென்றுவிட்டது.
ஆந்திராவில் ரோபோவை ரிலீஸ் செய்வதற்கு முன்பு, ஒரே குழப்பம். குறிப்பாக நிஜாம் ஏரியாவில், படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிச்சயமற்ற நிலை தான். யார் ரிலீஸ் செய்யப்போவது, எந்த தியேட்டர்களில் என்று பல கேள்விகள்… என்ற குழப்பம் தான். ஆனால் டிக்கட் புக்கிங் துவங்கிய சில மணி நேரங்களில் ரோபோ அனைத்து கணிப்புக்களையும் தவிடு பொடியாக்கி முதலிடத்தை பிடித்துவிட்டது.
ஆந்திராவின் ‘C’ சென்டர்கள் என்றழைக்கப்படும் கடற்கரை மற்றும் ராயலசீமா பகுதிகளில் கூட படம் பட்டையை கிளப்பிவிட்டது.
எப்படியோ ஆந்திராவின் முன்னணி ஹீரோக்களுக்கு ரோபோ ஒரு சவால் தான்.”//
Video clip of the above said TV 9 news
http://www.youtube.com/watch?v=gtmA7wwyCZY&feature=player_embedded
சரி..ரோபோவின் இந்த மாபெரும் வெற்றி குறித்து, ஆந்திராவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் கூறுவது என்ன?
ஹைதராபாத்தில் ஆர். டி .சி. கிராஸ் ரோட்டில் உள்ள ‘ஓடியன் – 70 mm’ திரையரங்க நிர்வாகி திரு. பாலகிருஷ்ணா கிருஷ்ணா நம்மிடம் கூறியதாவது :
கேள்வி : ரோபோவை பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
பதில் : இந்திய அளவில் – சமீபகாலகட்டங்களில் – வந்த படங்களில் மிகச் சிறந்த திரைப்படம்.
கேள்வி : மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடப்படும்போது ரோபோ எப்படி?
பதில் : தயவு செய்து மற்ற திரைப்படங்களுடன் ரோபோவை ஒப்பிடாதீர்கள். காரணம் இதன் சப்ஜெக்டே வேறு. ரோபோவின் இடத்தை நிரப்ப வேறு எந்த படத்தாலும் முடியாது.
கேள்வி : ரோபோவின் வசூல் எப்படி?
பதில் : தெலுங்கின் மிகப் பெரிய ப்ளாக்பஸ்டருக்கு இணையானதொரு வசூலை ரோபோ தந்துள்ளது.
கேள்வி : 50 நாட்களை படம் கடந்துள்ள நிலையில், தற்போது பொதுமக்களிடம் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது ?
பதில் : பல புதிய தெலுங்கு படங்கள் ரிலீசாகிற நிலையிலும் ரோபோவுக்கு இன்னும் மக்கள் மனத்திலும் இதயத்திலும் நல்ல இடம் உள்ளது. படம் இன்னும் வலுவாக போய்க்கொண்டிருக்கிறது. இன்றும் கூட வாரநாட்களில் 40-50% வரையிலும் வார இறுதியில் 80% வரையிலும் எங்கள் அரங்கில் படம் ஃபுல்லாகிறது. ஒரு டப்பிங் படமாக இது மிகப் பெரிய விஷயம்.
பலன் அடைந்தவர்களில் ஒருவரே நேரடியாக கூறிவிட்டார். இதற்க்கு மேல் வேறு என்ன வேண்டும்?
(இந்த பதிவை கொண்டு வர உதவியாக இருந்த ஹைதராபாத்தில் இருக்கும் நண்பர் & நம் தள வாசகர் காந்திக்கு நம் நன்றி!)
[END]
————————————————————
For AP-Box office report Part 1 please check:
http://onlysuperstar.com/?p=9357
————————————————————
No comments:
Post a Comment