யோகாவும், நல்ல சிந்தனைகளுமே சூப்பர் ஸ்டாரின் இளமைக்கு காரணம் – மேக்கப் கலைஞர் பானு ருசிகரம்!

ந்திரனில் எத்தனையோ அட்ராக்க்ஷன்கள் இருப்பினும், எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்தது, சூப்பர் ஸ்டாரின் இளமை பொங்கும் தோற்றம்.

ஏதோ மேக்கப் கலையின் உபயத்தால் மட்டுமே சூப்பர் ஸ்டார் இப்படி இளமையுடன் தோன்றவில்லை. அவர் ரெகுலராக ப்ராக்டீஸ் செய்யும் யோகா, தியானம், மற்றும் அவருக்குள் இருக்கும் நற்சிந்தனைகள் இவையும் தான் அவரது இளமைக்கு காரணம்.

சூப்பர் ஸ்டாரை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளமையாக எந்திரனில் நாம் பார்த்தோமென்றால் அதற்க்கு பின்னணியில் இருப்பவர் மேக்கப் கலைஞர் பானு. (சிவாஜியிலும் இவர் தான் சூப்பர் ஸ்டாருக்கு மேக்கப்!).

மேக்கப் கலைஞராக திரையுலகில் தான் துவங்கிய பயணம் குறித்தும், சூப்பர் ஸ்டாருக்கு எந்திரனில் மேக்கப் போட்ட அனுபவம் குறித்தும் பானு இந்த வாரம் குங்குமத்திற்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.

“மேக்கப்பால் மட்டுமே ஒருவரை முழுவதுமாக அழகுபடுத்தமுடியாது. ஒருவரிடம் மறைந்திருக்கும் அழகை மேக்கப்பால் கொஞ்சம் கூட்ட முடியும், அவ்வளவு தான்!” என்று பானு கூறியிருப்பதை கவனிக்கவேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது தொழிலில் காட்டும் அர்பணிப்பும், ஈடுபாடும், அவரது சிறந்த குணநலன்களும் தான் அவரது இளமைக்கு காரணம் என்று சூப்பர் ஸ்டாரின் இளமை பொங்கும் தோற்றத்திற்கான காரணமாக பானு இந்த பேட்டியில் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

பானு அவர்கள் கூறுவதை படிக்கும்போது “இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது” என்ற பொன்மொழி தான் நமக்கு நினைவுக்கு வந்தது. எத்துனை உண்மையான வார்த்தைகள்…!

குங்குமம் ஸ்கேன் பக்கங்கள்

Page 1

Page 2

Page 3

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...