இதோ வந்துவிட்டது ஒரு ரசிகனாய் பல நாட்கள் தவம் இருந்ததற்கான பலனை அனுபவிக்கும் அந்த திருநாள்
என்திரன் பற்றி எங்காவது ஏதாவது ஒரு செய்திதாளில்லோ வராதோ அல்லது வாரவாரம் வரும் இதழிலோ வராதோ எங்கோ எதோ மூலையில் இணையத்தில் போட்டு இருப்பார்களோ என்று அலையோ அலையோ என்று அலைந்த அந்த நாட்கள் ஒரு சுகமான சுமைகள்.
எல்லா டைரக்டர் இடமும் தலைவர் வேலை செய்து விட்டார் இந்த ஷங்கர் கூட சேர்ந்து ஒரு முதல்வன் மாத்ரி ஒரு படம் பண்ணா போதும் என்று நினைத்து ஏங்கியது ஒரு காலம் …வந்தது சிவாஜியின் அறிவிப்பு …பின்பு படமும்
எல்லாம் நிறைவேறியது …ஆண்டவனுக்கு நன்றி சொல்லி சிவாஜியின் சாதனையை கொண்டாடி முடிபதற்குள் …அடுத்த அறிவிப்பு அதுவும் யாரும் எதிர்பாராத அறிவிப்பு
(ஒருவேளை ஆண்டவன் இப்படி நினைதிருபானோ “முதல்வனில் தலைவர் நடித்திருந்தால் இன்று தமிழ்நாடு இருக்கும் நிலையே வேற அதற்ku பதிலாக ரஜினியை உலக திரைக் கலைங்கர்களின் முதல்வராக்க வேண்டும்” என்று…அதற்கு தேவை ஒரு இமாலய வெற்றி .. அதனாலோ பல தடங்கல்கள் கொடுத்து அதை தலைவர் பக்கம் வர வைத்துள்ளான் )
யாருக்கோ செதுக்கிய பொது அது வெறும் நாற்காலி …சிங்கதிற்கேன்று ஆனா பின் அது சிம்மாசனம் . …
என்று ஷூட்டிங் தொடங்கியதோ அன்று நம் மன கனவுகளும் தொடங்கியது .ஷூட்டிங் தொடங்கியதும் என் (நம்) மனதில் முதல் எதிர்பார்ப்பு தலைவர் எப்படி தோன்றுவார்.(பெர்சொனலாக எனக்கு தலைவரை பிரெஞ்சு பியர்ட் வச்சு பார்க்கணும் ஆசை சிவாஜியில் எதிர்பார்த்தேன் ….ஆண்டவனுக்கு என் எதிர்பார்ப்பை சீக்ரம் புரிஞ்சுகிறான் இந்த படத்தில் அதே தோற்றம் ) …
முதல் போஸ்டர் அறிவிப்பு அந்த மெட்டல் கேப் அணிந்து ரோஸ் வைத்துகொண்டு ஒரு படம் வெளியானது …
அன்னைக்கு எகிற ஆரம்பித்த எதிர்பார்ப்பு …கூடவே ஒரு ஒரு நாளும் சந்தோசங்களும் சேர்ந்து
தலைவர் முன்பு சொன்னது போல் ” சோதனைய சந்திச்சா தான் சாதனை “…….Recession
படம் கைமாற்றம் ..
நம் மனதிலோ மனப்போராட்டம்
எல்லாம் நன்மைக்கே என்று நம்மை நாமே சமாதான படுத்திகொண்டு அதில் உள்ள நன்மைகளை எடுத்துக்கொண்டு நம் கனவுகளை மீண்டும் தொடங்கினோம் .. ஷூட்டிங்கும் தொடங்கியது
vellore கல்லூரியில் படபிடிப்பு நடைபெற்ற புகைப்படத்தை கண்டு
அதிலும் தலைவரின் கூரிய பார்வை கண்டு அவரின் அந்த தோற்றத்தை கண்டு மகிழ்ச்சியில் மிரண்டு போனது
தலைவர் சென்னையில் நடந்த ஷூட்டிங் சென்ற பொது டிராபிக் ஜாமில் மாட்டிகொண்டு..அதில் இருந்து தப்பிக்க காவலர் உதவியோடு பைக்கில் ஷூட்டிங் ஸ்பாட் சென்றது
இன்று நினைவுகளில் நிழலாடுகிறது…இப்படி தினம் தினம் பல செய்திகள் …
அதில் சில …
“Oh my God… finally I’ve seen Rajini’s style” – A very excited Aishwarya Rai!!…in CNNIBN
A dazzling title song for Endhiran
Title song Sung by SPB
எழும்பூர் ராஜா முத்தையா ஹாலில் எந்திரன் படப்பிடிப்பு
…
எங்கெல்லாம் ஷூட்டிங் சென்றார்களோ அங்கெல்லாம் நாமும் சென்று வந்தோம் நினைவுகளில்
இப்படி பல பல செய்திகள் ..வெளியானாலும் சில திரிகபட்ட சேதிகள் நம்மை சங்கடப்பட்ட வைத்தன
அதில் முக்கியமான ஒன்று கத்திப்பாராவில் நடந்த படபிடிப்பில் வெளியான முரண்பாடான செய்தி …
ஆனால் நம் சுந்தர் உண்மையை அதாரபூர்வமாக வெளியிட்டு சந்தர்ப்ப வாதிகளின் சந்தர்பத்தை தடுத்தார்
(இதுபோல் இந்த தளம் இல்லையேல் என்திரன் பற்றி நம்பகமான செய்தியை அதும் உடனுக்குடன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை உங்களுக்கு நான் இதற்காக பல ரசிகர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் தெரிவித்துகொள்கிறேன் சுந்தர் )
இதற்கிடையில் ஈ ரா , அருண் ஜி ,..வசீ போன்ற நண்பர்களின் கமெண்ட் என்ற பேரில் வந்த பதிவுகளும் பல சுவாரசியங்கள் அடங்கியது (இத புத்தகமாவே போடலாம்)
அதிலும் DR.Suneel அவர்களின் பங்கு மகன்தானது அவரது மொழிபெயர்ப்பு பல தமிழ் தெரியாத தலைவரின் ரசிகர்களை இன்புற செய்தது (நன்றி சுனில் ஜி )
பா. கண்ணன், deen ,,R,gopi ..Suresh ,,என்று பல நண்பர்களின் உணர்வு பரிமாற்றங்கள் …
மேலும் mrs கிருஷ்ணன் (நம் தங்கை ) அவர்களின் அதிரடி கமெண்ட்ஸ் என்று இந்த கடைசி ஆறு மாதங்கள் நினைவுகளில் நிரம்பி வழிகிறது
திடீர் என்று ஷங்கர் தனக்கென்று உருவாக்கிய இணையம ..அதில் என்திரனுகாக ஓடி சென்று கமெண்ட் போட்டது ..அவருக்கே suggestion கொடுத்தவர்களின் கமெண்ட்ஸ் ….மற்றும்
ஹிட்ஸ் அதிகபடுதுவதர்காக சில வஞ்சகர்கள் யு டுபில் என்திரன் trailer என்ற பேரில் விரிக்கும் வலையில் வீழ்ந்து …எழுந்து
நம்மவர்கள் அதே யு டுபில் தன் திறமையை பயன்படுத்தி என்திரனுகாக அவர்கள் கைவண்ணத்தை பார்த்து வியந்து (Eg:Vijay Andrews) …
பாடல் …வெளிஈடு.
வைரமுத்து பாடல் வரியை வெளிடும் முன்பே நம் மனது எண்ணங்களில் வரிகளை விதைத்து பார்த்தது…
பாடலின் வார்த்தைகள் ..புதிய மனிதா ….சிலிகான் சிங்கம்..என்று சிறிது சிறிதாய் வெளிவர ஆரம்பித்தது .. …
பாடல் வெளியாகும் என்று தெரிந்தபின் எங்கு விழா…அங்கே இங்கே என்று அதற்கும் நம் கலந்துரையாடல்
..ஒரு பாட்டை மட்டும் சூரியன் FM இல் கேட்டு அதை ரெகார்ட் பண்ணகூட முடியாம போராடி..பாடல் வெளியீடு நமக்கு நேரடி ஒளிபபரபில்லை …என்று மனது நொந்தோம்
அடுத்த நாள் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியை இணையத்தின் உதவியால் நேரடியாக பார்த்து நெகிழ்ந்தது மனது
என்று செய்திதாளில் அறிவிப்பு வரும் என்று ஒரு ஒரு நாளும் எதிர்பார்த்த அந்த நாட்கள் …வந்த அந்த முதல் அறிவிப்பு இன்று நினைவில் இனிக்கிறது
trailer வெளியீடு என்று காசி கோயிலுக்கு செல்வது போல் காசி theatruku ஊர்வலம் சென்று வந்ததென பல சுகமான நினைவுகள் …
இதோ இன்று தூங்கபோவது ஏந்திரனை பார்க்காமல் கனவுகளோடு தூங்கும் ஒரு ரசிகன் …
என் அடுத்த உறக்கம் ..அப்பாட பார்த்தாச்சு . ஒரு இமாலய நிம்மதி யோடு இருக்கும் ..பெரிய சாதனை
பன்ன திருப்தி …இந்த நிறைவு வேற எதிலும் கிடைக்க சாத்தியம் இல்லை
இன்று வரை என் நினைவில் கண்ட காட்சிகள் ..
மறைந்துபோகும் …
உண்மை காட்சிகள் என் நினைவுகளில் நிறைந்துபோகும்
அடுத்து
வெற்றிகொண்டாடங்களை நினைத்து எண்ணங்கள் விரைந்துஓடும்
No comments:
Post a Comment