
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவை நான்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு இளைஞர் திடீரென்று கலாட்டாவில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபலங்களின் வீட்டில் விசேஷம் நடக்கும் நேரத்தில் சிலர் கலாட்டாவில் இறங்கி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் நேற்று காலை சென்னையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் நடந்த நேரத்தில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஒரு இளைஞர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்.
அவர் பெயர் சீனிவாசன். விழுப்புரம் அருகே சித்தக்குடியைச் சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கியிருக்கிறார்.
நேற்று காலை திடீர் என்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்குச்சென்ற சீனிவாசன், அங்கிருந்த பாதுகாவலர்களிடம் நான் தான் ரஜினியின் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி ரகளை செய்துள்ளார். இது குறித்து அந்த பாதுகாவலர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் எம்.ஏ. படித்தவர் என்றும், மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவருடன் வந்திருந்த நண்பர் வெங்கடேசனிடம் உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, அனுப்பி வைத்தனர் போலீசார்.
No comments:
Post a Comment